ஈரானின் ஏவுகணைகளால் கப்பல்களை தாக்கமுடியும்- முக்கிய தளபதி
19 Jun,2019
விமானந்தாங்கி கப்பலை தாக்ககூடிய கண்டங்களிற்கு இடையிலான ஏவுகணைகள் ஈரானிடம் உள்ளதாக ஈரானின் முக்கிய இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.
ஈரானின் புரட்சிகர காவல்படையின் முக்கிய தளபதி மேஜர் ஜெனரல் ஹொசைன் சலாமி இதனை தெரிவித்துள்ளார்.
ஈரான் கண்டங்களிற்கு இடையிலான ஏவுகணைகளை உருவாக்கியுள்ளதன் காரணமாக பிராந்தியத்தில் அதிகார சமநிலை ஈரானிற்கு சாதகமானதாக மாறியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
பிராந்தியத்தில் அமெரிக்க விமானந்தாங்கி கப்பல்களின் ஆதிக்கத்திற்கு முடிவை காண்பதற்காக 12 வருடங்களிற்கு முன்னரே ஈரான் ஏவுகணைகளை பரிசோதனை செய்து பார்த்துவிட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
எங்களிடம் இந்த தொழில்நுட்பமிருந்தால் எங்களால் எதிரிகளை இலக்குவைக்கமுடியும் என குறிப்பிட்டுள்ள ஹொசைன் சலாமி நாங்கள் ஏவுகணைகள் மூலம் கடலில் இலக்குகளை துல்லியமாக முடியுமா என பரிசோதனை செய்துபார்த்தோம் அன்றைய தினம் எங்களால் அதிகார சமநிலையை மாற்ற முடிந்தது எனவும் தெரிவித்துள்ளார்.