ஈரானிற்கு பிரித்தானிய வெளியுறவு செயலாளர் எச்சரிக்கை!
16 Jun,2019
ஓமான் வளைகுடாவிற்கு 100 பிரித்தானிய கடற்படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஓமான் வளைகுடா பகுதியில் பயணித்த நோர்வே மற்றும் சிங்கப்பூருக்கு சொந்தமான எண்ணெய் கப்பல்கள் மீது கடந்த வியாழக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து குறித்த பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளதுடன், ஈரான் இராணுவத்தினராலேயே இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது. எனினும் குறித்த குற்றச்சாட்டுக்களை ஈரான் அரசாங்கம் மறுத்துள்ளது.
இந்தநிலையில் பிரித்தானிய கப்பல்களை பாதுகாப்பதற்காக 100 சிறந்த கடற்படையினரை பிரித்தானிய அரசாங்கம் ஓமான் வளைகுடாவிற்கு அனுப்பி வைத்துள்ளது.
இதுகுறித்து பிரித்தானிய வெளியுறவு செயலாளர் ஜெரமி ஹன்ட் கூறுகையில், ‘வியாழக்கிழமை நடந்த இரட்டை தாக்குதல்களுக்குப் பின்னால் ஈரான் இருப்பது நிரூபிக்கப்பட்டால் எதிர்பாராத விளைவுகளை ஈரான் சந்திக்கும்’ என எச்சரிக்கை விடுத்துள்ளார்.