சுற்றுலா பயணிகளால் சீன கோயில் தீயில் சாம்பல்
21 Nov,2025
சீனாவின் ஜியான்சு மாகாணத்தில் பென்குவாங் மலை உள்ளது. இங்கு சீனாவின் பாரம்பரிய கோயில்கள் உள்ளன. இந்நிலையில், அங்குள்ள வென்சாங் பெவிலியனில் உள்ள கோயில் கடந்த 12-ம் தேதி புதன்கிழமை தீயில் எரிந்து சாம்பலானது.
இதுதொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாயின. இந்த கோயில் கடந்த 2009-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.
சீன இலக்கியம், கலாச்சாரம், பாரம்பரியம் கொண்டு அந்தக் கோயில் கலை வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்டது. இக்கோயிலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
அப்போது கோயிலுக்குள் மெழுகுவர்த்தி, ஊதுபத்திகளை கொளுத்தி வைப்பது வழக்கம். அதுபோல் சுற்றுலா பயணிகள் கடந்த 12-ம் தேதி மெழுகுவர்த்தி, ஊதுபத்திகளை கொளுத்தி வைத்துள்ளனர். எளிதில் தீப்பற்றும் இடத்தில் அவற்றை ஏற்றி வைத்ததால் கோயில் தீப்பிடித்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.