காசா முனைக்குள் மீண்டும் மனிதாபிமான உதவி வாகனங்கள்
17 Oct,2025
இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தை தொடர்ந்து காசா முனைக்குள் மீண்டும் மனிதாபிமான உதவி சரக்கு வாகனங்கள் நுழைந்துள்ளதாக சர்வதேச தகவ்லக்ள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையீட்டினால் இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்ம் கொண்டுவரப்பட்டது. போரை நிறுத்துவதற்காக ஏற்பட்ட மிகவும் சிக்கலான சண்டை நிறுத்தம் ஒப்பந்தம் முறிந்து போகுமோ என்ற அச்சம் நிலவியபோது அவ்வாரு எதுவும் நிகழவில்லை.
ஏனெனில், பணயக்கைதிகளின் சடலங்களை ஹமாஸ் மெதுவாக ஒப்படைப்பதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியது.
இதனால், ரஃபா எல்லையை மூடுவதாகவும், உதவிப் பொருட்களைக் குறைப்பதாகவும் இஸ்ரேல் எச்சரித்தது. அதிகாரிகள் ரஃபா எல்லையைத் திறக்கத் தயாராகி வருவதாகவும், 600-க்கும் மேற்பட்ட உதவி சரக்கு வாகனங்கள் காசாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
காசாவின் மக்களுக்கு உயிரைக் காக்கும் இந்த உதவிப் பொருட்கள் கிடைத்தாலும், சடலங்கள் தொடர்பான இந்த இழுபறி மற்றும் இதர பெரிய பிரச்சினைகள் எப்போது வேண்டுமானாலும் இந்த அமைதி ஒப்பந்தத்தைப் பிளக்கக்கூடும் என்ற பதற்றத்தையும் நீடிக்கிறது.