எவரெஸ்ட் சிகரத்தில் சிக்கி 1,000 பேர் தவிப்பு: சீன மீட்புப் படையினர் தீவிரம்!
06 Oct,2025
உலகின் மிக உயரமான மலைப்பகுதியான எவரெஸ்ட் சிகரத்தின் கிழக்கே அமைந்துள்ள திபெத் பிராந்தியத்தில் கடும் பனிப்புயல் நிலவி வருவதால், மலையேற்ற வீரர்கள் உட்பட சுமார் 1,000 பேர் மலையில் இருந்து இறங்க முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர்.
மலைச்சரிவுகளில் தற்காலிக முகாம்கள் அமைத்து மலையேறும் பணியில் ஈடுபட்டிருந்த வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோரே இவ்வாறு சிக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பனிப்புயலில் சிக்கியுள்ள இந்த ஆயிரம் பேரையும் மீட்கும் பணியில் சீன மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.