சட்டவிரோதமாக நுழைந்தவர்கள் 120 ஈரானியர்களை நாடு கடத்தும் அமெரிக்கா
01 Oct,2025
அமெரிக்காவில் இருந்து 120 ஈரானியர்கள் நாடு கடத்தப்பட உள்ளனர். அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வௌிநாட்டினரை வௌியேற்றும் நடவடிக்கையை அதிபர் டிரம்ப் தீவிரப்படுத்தி உள்ளார். அதன்படி பல்வேறு வௌிநாட்டினர் தங்கள் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி உள்ள 120 ஈரானியர்கள் நாடு கடத்தப்பட உள்ளனர். இதுதொடர்பாக ஈரான் அமெரிக்கா இடையே ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் 400 ஈரானியர்கள் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட உள்ளதாக ஈரான் அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.