இஸ்ரேலில் ஆட்சியை கவிழ்க்கும் ராணுவம்? திட்டமிட்ட ராணுவ தளபதி..
07 Aug,2025
காசா மீது போர் தொடர்ந்து இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆட்சியை கவிழ்க்க ராணுவ தளபதி இயல் ஜமீர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுதொடர்பக பெஞ்சமின் நெதன்யாகுவின் மகன் யாயர் நெதன்யாகு போட்ட பதிவு விவாதத்தை கிளப்பி உள்ள நிலையில் அதன் பின்னணி பற்றிய விவரம் வெளியாகி உள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றாக இஸ்ரேல் உள்ளது. இது யூத நாடாகும். இந்த நாட்டை சுற்றி சுற்றி இஸ்லாமிய நாடுகள் தான் உள்ளன. தற்போது இஸ்ரேல் பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகு உள்ளார். அண்டை நாடான பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் போர் புரிந்து வருகிறது.
இவ்வளவு விஷயம் நடந்திருக்காம்" அதேபோல், ஈரான் உடனான போர் முடிவுக்கு வந்துள்ளது. லெபனானில் செயல்பட்டு வரும் ஹெஸ்புல்லாவுடன் பிரச்சனை உள்ளது. இப்படி சுற்றி சுற்றி பல நாடுகளை இஸ்ரேல் சமாளித்து வருகிறது. காசா மீதான போர் 2வது ஆண்டை நெருங்கி வருகிறது. அமெரிக்கா ஆதரவுடன் இஸ்ரேல், காசாவை தொடர்ந்து தாக்கி வருகிறது. காசாவில் உள்ள மக்கள் வேறு நாட்டுக்கு இடம்பெயர்ப்பது தான் ஒரே தீர்வு என பெஞ்சமின் நெதன்யாகு கூறி வருகிறார். மேலும் அமெரிக்கா உதவியுடன் அந்த நாட்டு மக்கள் வேறு நாட்டுக்கு அகதிகளாக அனுப்ப திரைமறைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்படியான சூழலில் தான் இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆட்சியை கலைக்க ராணுவ தளபதி திட்டமிட்டுள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. இதனை கூறியிருப்பவர் பெஞ்சமின் நெதன்யாகுவின் மகன் யாயர் நெதன்யாகு தான். இவர் தற்போது அரசு பதவிகளில் எதுவும் இல்லை.
இதுதொடர்பாக யாயர் நெதன்யாகு தனது எக்ஸ் பக்கத்தில், ராணுவ தளபதி இயால் ஜமீர் இஸ்ரேல் அரசை கவிழ்க்க திட்டமிட்டுள்ளார். காசாவை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் எடுத்து இஸ்ரேலில் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் எடுக்க நினைக்கிறார். இதற்காக இஸ்ரேலில் அதிருப்தியாளர்களை வைத்து கலக்கத்தை ஏற்படுத்தி ராணுவம் மூலம் ஆட்சியை கட்டுப்பாட்டில் எடுக்க நினைக்கிறார் என்று கூறியிருக்கிறார். இது தற்போது பெரிய அளவில் விவாதத்தையும், சர்ச்சையையும் கிளப்பி உள்ளது.
ஆனால், நெதன்யாகு மகன் யாயர் நெதன்யாகுவின் குற்றச்சாட்டை ராணுவ தளபதி இயால் ஜமீர் முற்றிலுமாக மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர், ‛‛சமூக வலைதள பக்கங்களில் இப்படி பதிவிட்டு என்னை அச்சுறுத்த வேண்டாம். நான் இப்படியான அச்சுறுத்தல்களை ஒவ்வொரு முறையும் ஏற்க முடியாது. இதை அவர் ஆப்படிச் சொல்ல முடியும் என்று அவர் கூறினார். இதிலிருந்து உங்களுக்கு என்ன கிடைக்கும்? என்னை ஏன் தாக்குகிறீர்கள்? எல்லாவற்றிற்கும் மேலாக, போரின் நடுவில் இதைச் செய்வதன் நோக்கம் என்ன?'' என்று கேட்டுள்ளார்