கடந்த 1987 இல் கையெழுத்தான இடைநிலை அணுசக்தி (INF) ஒப்பந்தத்திற்கு இனி கட்டுப்படப் போவதில்லை என்று ரஷ்யா அறிவித்துள்ளது. மேற்கு நாடுகளின் செயல்கள் தங்கள் பாதுகாப்புக்கு "நேரடி அச்சுறுத்தலை" உருவாக்கியதாக கூறியுள்ள ரஷ்யா இந்த முடிவை எடுத்துள்ளது. ரஷ்யாவின் இந்த முடிவு அணு ஆயுத வல்லமை கொண்ட இருநாடுகளுக்கும் இடையே ஆயுத போட்டியை அதிகரிக்க கூடும் என்ற கவலை சர்வதேச அளவில் எழுந்துள்ளது. ரஷ்யா
- உக்ரைன் மோதல் தொடர்ந்து நீடித்து வருவதால் ஏகத்திற்கும் கடுப்பான டிரம்ப், ரஷ்யாவை கடுமையாக விமர்சித்து வருகிறார். உலகின் பல்வேறு நாடுகளிலும் நடக்கும் மோதலை நானே நிறுத்தினேன் எனப் பேசி வரும் டிரம்பின் பேச்சை ஏற்க ரஷ்யா மறுப்பதால் புதின் மீது கடும் கோபத்தில் உள்ளார். அதிபராக பதவியேற்றால் ஒரே நாளில் உக்ரைன் ரஷ்யா போரை நிறுத்துவேன் என கடந்தாண்டு டிரம்ப் கூறியிருந்தார்.
. டிரம்ப் அவ்வப்போது ரஷ்யாவை எச்சரிக்கும் விதமாக பேசினாலும், நாங்கள் ஒன்றும் ஈரான், ஈராக் இல்லை என்று ரஷ்யா பதிலடி கொடுத்து வருகிறது. சிறப்பு தூதர்களை கொண்டு பேச்சுவார்த்தை நடத்தியும் புதின் இறங்கி வரவில்லை. இதனால், கடும் கோபம் அடைந்த டிரம்ப், ரஷ்யாவை பொருளாதார ரீதியாக முடக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இந்தியா மீது வரி விதிப்பு அந்த வகையில், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் நிறுத்த வேண்டும் என்று டிரம்ப் தொடர்ந்து பேசி வருகிறார். ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதால், இந்தியா மீதான வரியை மேலும் உயர்த்தப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
இதற்கு மத்தியில் ரஷ்ய முன்னாள் அதிபர் திமித்ரியின் மெத்வதேவ் பேச்சால் டென்ஷன் ஆன டிரம்ப், இரண்டு அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை பொருத்தமான பகுதிகளுக்கு நகர்த்த தான் உத்தரவிட்டிருப்பதாக கடந்த வெள்ளிக்கிழமை கூறினார்.
அணு ஒப்பந்தங்களில் இருந்து வெளியேற உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை அணு ஆயுதங்களை கொண்டுள்ள நாடுகளுக்கு இடையேயான போராக மாறக்கூடும் என்று திமித்ரி மெத்வதேவ் கூறியதால் கோபம் அடைந்த டிரம்ப், மேற்கண்ட நடவடிக்கைக்கு உத்தரவிட்டார். உலகின் சக்தி வாய்ந்த நாடுகளாக கருதப்படும் ரஷ்யா- அமெரிக்கா இடையே வலுத்து வரும் மோதல் சர்வதேச
அளவில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.இந்த நிலையில்தான், அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தங்களில் இருந்து வெளியேற போவதாக ரஷ்யா அறிவித்து பரபரப்பை கிளப்பியுள்ளது. இது தொடர்பாக ரஷ்யா தரப்பு கூறும் போது, "மேற்கு நாடுகளின் செயல்பாடுகள் தங்கள் நாட்டிற்கு நேரடி அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும், எனவே, அணு ஒப்பந்தத்தை பராமரிப்பதற்கான சூழல் மறைந்துவிட்டதால்,
ரஷ்யா இனியும் முந்தைய சுயக்கட்டுப்பாடுகளை பின்பற்றாது" என்று தெரிவித்துள்ளது. அமெரிக்கா ரஷ்யா உறவு ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கடந்த 1987 ஆம் ஆண்டு இடைநிலை-தூர அணுசக்தி ஃபோர்ஸ் (INF) ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இருந்தது. இந்த ஒப்பந்தம், 500 முதல் 5,500 கிலோமீட்டர் வரம்பைக் கொண்ட தரைவழி ஏவுகணைகளை நிலை நிறுத்துவதை தடை செய்தது. எனினும், ரஷ்ய விதி மீறலில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டி அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகியது. இதனால், இந்த ஒப்பந்தம் 2019 இல் முடிவுக்கு வந்தது.