ரஷ்யாவின் காம்சத்கா பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.4ஆக பதிவு
22 Jul,2025
ரஷ்யாவின் காம்சத்கா பகுதியில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது – ரிக்டர் அளவுகோலில் 6.4ஆக பதிவாகியுள்ளது. ரஷ்யாவின் காம்சத்கா பகுதியில் ஏற்கனவே கடந்த ஞாயிற்றுக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
கடந்த ஞாயிற்றுகிழமை ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தின் கிழக்குக் கடற்கரையில் 7.0 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்க ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஷிவேலுச் எரிமலை வெடித்தது. ரஷ்யா நேரப்படி ஞாயிற்றுக்கிழமை காலை காலை 7.10 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம், 18 மைல் ஆழத்தில் தாக்கியது. இதன் விளைவாக பெட்ரோபாவ்லோவ்ஸ்க் -கம்சாட்ஸ்கி நகரில் உள்ள கட்டிடங்களில் “கடுமையாக குலுங்கியது. மேலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலநடுக்கமானது மற்றுமொரு வலுவான நிலநடுக்கத்திற்கான முன்னோட்டமாக இருக்கலாம் என ரஷ்ய விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். 9.0 ரிக்டர் அளவுடன் “24 மணி நேரத்திற்குள்” இரண்டாவது நிலநடுக்கம் வரக்கூடும் என்று எரிமலை ஆய்வு நிறுவனம் தெரிவித்தது.
ஷிவேலுச் எரிமலையில் இருந்து தடிமனான சாம்பல் வெளியேறி வருகிற ப்ளூம் கிழக்கு-தென்-கிழக்காக சுமார் 930 மைல்கள் (1,500 கிமீ) வரை நீண்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்தில், பசிபிக் பகுதி வட அமெரிக்கா மற்றும் யூரேசியா தட்டுகளைப் பொறுத்து மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்வதாக அமெரிக்க புவியியல் ஆய்வு (USGS) தெரிவித்திருந்தது.