“அமெரிக்கா அதிபர் டிரம்ப் கெஞ்சியதால் போர் நிறுத்தம்...” - ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு
24 Jun,2025
கத்தார் மற்றும் ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் நேற்று ஏவுகணை தாக்குதலை நடத்தியது.
ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி அந்நாட்டின் மீது கடந்த 13 ஆம் தேதி முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வந்தது. இதையடுத்து இரு நாடுகளுக்குள்ளும் போர் பதற்றம் உருவான சூழலில்,
அமெரிக்காவின் இந்த செயலுக்கு இந்தியா, சீனா, ரஷ்யா, சவுதி அரேபியா, ஓமன், ஈராக் உள்ளிட்ட நாடுகள் தங்கள் கண்டனத்தை தெரிவித்திருந்தன. இதையடுத்து, கத்தார் மற்றும் ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியது.
ஈரானின் இந்த தாக்குதலுக்கு சவுதி அரேபியா, யூஏஇ உள்ளிட்ட நாடுகள் தங்கள் கண்டனத்தை தெரிவித்த நிலையில், இந்த தாக்குதலால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் விளக்கமளித்தார். மேலும் இஸ்ரேலும், ஈரானும் முழுமையான போர் நிறுத்தம் செய்ய ஒப்புக் கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். ஆனால் அந்த அறிவிப்பு வெளியான சில மணிநேரத்தில் ஈரான் அந்த தகவலை மறுத்தது.