இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரில் இதுவரை மிரட்டி வந்த அமெரிக்கா இன்று நேரடியாக ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலுக்கு ஆதரவாக இன்று ஈரானில் உள்ள நடான்ஸ், ஃபோர்டோ, இஸ்பஹான் அணு ஆய்வு கூடங்களில் அமெரிக்கா குண்டு மழை பொழிந்தது. இதில் அந்த அணுஆய்வு கூடங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில் ஈரானை தாக்க டிரம்ப் பயன்படுத்திய 2 கொடூர ஆயுதங்கள் பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. இஸ்ரேல் -
ஈரான் இடையே கடந்த 9 நாளாக போர் நடந்து வருகிறத. இன்று 10 வது நாள் போர் தொடங்கியது. இந்த போரில் தான் திடீரென்று அமெரிக்கா என்ட்ரி கொடுத்துள்ளது. ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படுவது பற்றி இன்னும் 2 வாரத்துக்கு பிறகு தான் முடிவு எடுப்போம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். ஆனால் திடீரென்று யாரும் எதிர்பார்க்காத வகையில் இன்று அதிகாலையில் திடீரென்று அமெரிக்க போர்
விமானங்கள் ஈரானில் உள்ள நடான்ஸ், ஃபோர்டோ, இஸ்பஹான் உள்ளிட்ட அணுஆய்வு கூடங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த 3 இடங்களில் தான் ஈரான் தனது அணுஆயுதம் தயாரிப்புக்கான யுரேனியத்தை செறிவூட்டும் பணியை மேற்கொண்டு வந்த நிலையில் அங்கு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக டொனால்ட் டிரம்ப், ‛‛ஈரானின் மூன்று அணு ஆய்வு கூடங்களையும் குண்டு வீசி அழித்து விட்டோம். இனி மத்திய கிழக்கில் அமைதி நிலவும்'' என்று கூறியுள்ளார். ஈரானை இன்று அமெரிக்கா எப்படி தாக்கியது? என்பது பற்றி பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் ஈரானின் அணுஆயுத கட்டமைப்புகளை சிதைக்க ஈரான் 2 வகையான கொடிய ஆயுதங்களை பயன்படுத்தி உள்ளது.
அதில் முதலாவது நாம் பார்ப்பது GBU-57 Massive Ordnance Penetrator என்னும் குண்டு. இது சுரங்கம் மற்றும் பாதாள கட்டமைப்புகளை தாக்கி அழிக்கும் தன்மை கொண்டது. இதனை ‛பங்கர் பஸ்டர்' குண்டு என்று அழைப்பார்கள். இந்த குண்டை இதுவரை அமெரிக்கா பயன்படுத்தியது இல்லை. இப்போது தான் முதல் முறையாக ஈரான் மீது அந்த குண்டை பயன்படுத்தி உள்ளது அமெரிக்கா. ஈரானை எடுத்து கொண்டால் அதன் அணுசக்தி திட்டங்களுக்கு அமெரிக்கா, இஸ்ரேல் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் ஈரான் தனது அணுஆயுதம் தயாரிப்பது தொடர்பான அணுசக்தி ஆய்வு கூடங்களை பூமிக்கடியில் கட்டமைத்துள்ளது.
குறிப்பாக ஃபோர்டோ தளம் என்பது மலைகளுக்கு நடுவே, தரையில் இருந்து 30 முதல் 260 அடி ஆழத்தில் பல அடுக்காக அமைந்துள்ளது. Also Read ஐடியா கொடுத்த மோடி.. அமெரிக்கா தாக்குதலுக்கு நடுவே ஈரான் அதிபருடன் பேச்சு.. ரொம்ப முக்கியம் இதனை இஸ்ரேல் வைத்துள்ள ஏவுகணை, குண்டுகளால் தகர்க்க முடியாது. இதனால் அமெரிக்கா தனது ‛பங்கர் பஸ்டர்' குண்டுகளை பயன்படுத்தி உள்ளது. . ஃபோர்டோ தளம் மீது மொத்தம் 6 பங்கர் பஸ்டர் குண்டுகளை அமெரிக்கா வீசியது. இதற்காக B-2 பாம்பர்ஸ் என அழைக்கப்படும் போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்த விமானங்களில் இருந்து தான் ‛பங்கர் பஸ்டர்' குண்டுகளை வீச முடியும் என்பதால் அமெரிக்கா அதனை தேர்வு செய்துள்ளது. அமெரிக்கா வீசிய GBU-57 Massive Ordnance Penetrator பங்கர் பஸ்டர் குண்டு ஒன்றின் மொத்த எடை 13,600 கிலோ. அதன் நீளம் 20.7 அடி. இந்த குண்டு தரையில் விழுந்ததும் 200 அடி ஆழத்துக்கு துளைத்து கொண்டு செல்லும். அதன்பிறகு தான் பயங்கரமாக வெடிக்கும். இதனால் கட்டுமானங்கள் நொறுங்கி விடும். அந்த வகையில் ஈரானின் ஃபோர்டோ யுரேனியம் செறிவூட்டும் மையம் தகர்க்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அதேபோல் ஈரானின் மற்ற அணு ஆய்வு மையங்களான நடான்ஸ், இஸ்பஹான் உள்ளிட்ட இடங்களில் யுரேனியம் செறிவூட்டும் மையங்களை அழிக்க அமெரிக்கா பயன்படுத்தியது ஏவுகணை. அந்த ஏவுகணையின் பெயர் Tomahawk.இதனை நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து அமெரிக்கா ஏவி உள்ளது. ஈரான் எல்லையில் இருந்து சுமார் 650 கிலோ மீட்டர் தூரத்தில் கடலுக்கு அடியில் அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டுள்ளது.
மொத்தம் 30 Tomahawk ஏவுகணைகளை அமெரிக்கா வீசி நடான்ஸ், இஸ்பஹான் யுரேனியம் செறிவூட்டும் மையங்களை அழித்துள்ளது. இந்த Tomahawk ஏவுகணை என்பது சக்தி வாய்ந்த க்ரூஸ் வகை ஏவுகணையாகும். ஒரு ஏவுகணையின் விலை 2 மில்லியன் அமெரிக்க டாலராகும். அதாவது இந்திய மதிப்பில் ரூ.17.31 கோடியாகும். இது கடலுக்கடியில் இருந்தோ அல்லது கடலின் மேற்பரப்பில் இருந்தோ பறந்து சென்று தரை பகுதி கட்டமைப்புகளை தாக்கி அழிக்கும் சக்தி கொண்டது.
இது 18.3 அடி நீளம் கொண்டது. 4,400 கிலோ எடை இருக்கும். 450 கிலோ வெடிமருந்தை சுமந்து செல்லும். க்ளஸ்டர் குண்டு எனப்படும் கொத்து கொத்தாக குண்டுகளை வைத்தும் இந்த ஏவுகணையை அனுப்ப முடியும். "15 நாளில் அணு ஆயுதம்".. ஈரான் மீது அமெரிக்கா இன்று திடீரென தாக்கியது ஏன்? பகீர் பின்னணி மேலும், மணிக்கு 885 கிலோ மீட்டர் வேகத்தில் இலக்கை சென்று தாக்கும் தன்மை கொண்டது. அதிகபட்சமாக 1,500 கிலோ மீட்டர் முதல் 2,500 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலக்குகளை தகர்க்க முடியும். மிகவும் துல்லியமான தாக்குதலை நடத்த முடியும்.
ஏனென்றால் ஜிபிஎஸ் கருவி உதவியுடன் இதை வழிநடத்தி சென்று தாக்க முடியும். முதல் முறையாக 1991ம் ஆண்டில் கல்ஃப் போரின் போது ஈராக்கில் இந்த ஏவுகணை பயன்படுத்தப்பட்டது. அதன்பிறகும் பல முறை இந்த ஏவுகணைகளை அமெரிக்கா பயன்படுத்தி உள்ளது. அதேபோல் சமீபத்தில் பார்த்தால் 2017 சிரியாவில் மோதலில் 59 Tomahawks ஏவுகணைகளை பயன்படுத்தி ஷாரத் விமானப்படை தளம் அழிக்கப்பட்டது. இப்போது ஈரான் மீதான இந்த தாக்குதலுக்கு இந்த ஏவுகணை பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.