கமேனியை கொல்ல ரெடியாகும் இஸ்ரேல்..
19 Jun,2025
இஸ்ரேல் ஈரான் இடையேயான மோதல் ஒரு வாரமாகத் தொடர்ந்து வருகிறது. இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. தற்போதைய சூழலில் இந்த மோதல் முடிவுக்கு வர வாய்ப்பில்லை. இதற்கிடையே ஈரான் உயர்மட்ட தலைவர் அயத்துல்லா அலி கமேனியை கொல்லும் பிளான் குறித்து கமேனி கூறிய கருத்துகள் கவனத்தை ஈர்த்துள்ளது. இஸ்ரேல் ஈரான் இடையே நீண்ட காலமாகவே மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்தச் சூழலில் கடந்த வெள்ளிக்கிழமை திடீரென ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்தது.
இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதலில் ஈரான் நாட்டின் பல முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டனர். மேலும், அணு ஆணுத ஆய்வாளர்களும் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் ஈரான் விவகாரம் இதற்கு ஈரானும் பதிலடி கொடுக்க களத்தில் இறங்கியுள்ளது. இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் அங்கு நிலைமை மோசமானதாக மாறி வருகிறது. இந்த விவகாரத்தில் ஒப்பீட்டளவில் இஸ்ரேலின் கை தான் ஓங்கி இருக்கிறது. ஈரானின் தலைநகர் தெஹ்ரான் தொடங்கிப் பல முக்கிய நகரங்களில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தின.
இதில் ஈரானுக்கு இழப்புகள் மிக மோசமாகவே இருந்தது. கமேனி இந்தச் சூழலில் தான் ஈரானின் உயர்மட்ட தலைவரான கமேனி மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என்ற தகவல் பரவியது. இந்த பிளான் அமெரிக்கா வரை போனதாகவும் இருப்பினும் டிரம்ப் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றும் தகவல் பரவின. முன்பே இது குறித்த கேள்வி எழுப்பியபோது நெதன்யாகு அதை மறுக்காமலேயே இருந்திருந்தார்.
. உலக கச்சா எண்ணெய் ஹைவே ஹார்முஸ் ஜலசந்தியை மொத்தமாக முடக்கும் ஈரான்? நெதன்யாகு சொன்ன வார்த்தை இதற்கிடையே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் பேச்சு மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஈரான் உயர்மட்ட தலைவர் அயத்துல்லா அலி கமேனியை கொல்லும் வாய்ப்பை நெதன்யாகு நிராகரிக்கவில்லை. குறிவைக்க வாய்ப்புள்ளதை நிராகரிக்கவில்லை. அதாவது அயத்துல்லா அலி கமேனியை கொல்லும் திட்டம் இருக்கிறதா என்ற கேள்விக்கு அவர் இல்லை என்ற பதிலைச் சொல்லவில்லை.
மாறாக அவர், "இப்போது எல்லா ஆப்ஷன்களும் ஓபனாகவே இருக்கிறது. அனைத்தையும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். இப்போது அது குறித்த கூடுதல் தகவல்களைப் பகிர விரும்பவில்லை. ஈரானில் அரசில் பங்கு கொண்டு இருக்கும் யாரும் தப்பிக்க முடியாது. நான் சும்மா பேச விரும்பவில்லை. பொறுத்திருந்து பாருங்கள். எங்கள் திட்டத்தை ஆக்ஷனில் தெரிந்து கொள்ளுங்கள்" என்றார்.
சரியாக 6 மணிநேரம் 59 நிமிடம்.. காலையில் மொத்த ஈரானும் அலறிடுச்சு பின்னணி அணு ஆயுதங்கள் விவகாரத்தில் அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தையில் ஈரான் உடன்பாட்டை எட்ட மறுத்தே வந்தது. இந்தச் சூழலில் தான் திடீரென கடந்த வெள்ளிக்கிழமை ஈரான் மீது ஆபரேஷன் ரைசிங் லயனை இஸ்ரேல் ஆரம்பித்தது. ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யும் பணிகளைத் தீவிரம் காட்டி வருவதாகச் சொல்லியே இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் ஈரானின் உள்கட்டமைப்பு மிக மோசமாகச் சேதம் அடைந்து வருகிறது.
ஈரான் பதிலடி கொடுக்க முயன்றாலும் இஸ்ரேலைச் சமாளிக்க முடியவில்லை. அமெரிக்கா இந்த மோதலில் நேரடியாகத் தலையிடவில்லை. இருந்த போதிலும், அவர்கள் இஸ்ரேலுக்கு முழு ஆதரவு கொடுத்து வருகிறார்கள். டிரம்பும் கூட ஈரான் சரணடையும் வரை தாக்குதலைத் தொடரவே அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. மத்திய கிழக்கில் வெடித்த இந்த மோதலால் உலகெங்கும் பரபரப்பு அதிகரித்துள்ளது.