மாநாட்டிலிருந்து பாதியில் கிளம்பிய டிரம்ப்! ஈரானை தாக்க முடிவு!
17 Jun,2025
இஸ்ரேல் ஈரான் போருக்கு இடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜி7 மாநாட்டை முடிப்பதற்கு முன்னதாகவே புறப்பட்டுச் சென்றார். மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றமான சூழ்நிலை இதற்கு காரணம் என்று கூறப்பட்டது. அவர் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலை வெள்ளை மாளிகையின் situation அறையில் தயாராக இருக்கும்படி கூறி உள்ளாராம். இதனால் ஈரான் மீது அமெரிக்காவும் தாக்குதல் நடத்துகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஜி7 மாநாட்டிலிருந்து டிரம்ப் அவசரமாக வெளியேறுவதற்கான காரணங்கள் கனடாவில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில், டிரம்ப் ஒரு நாள் முன்னதாகவே வெளியேறினார். வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவலின்படி, மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்ததே இந்த முடிவுக்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டது. நான் சீக்கிரம் திரும்ப வேண்டும், அதற்கான காரணங்கள் எல்லோருக்கும் தெரிந்ததே என்று செய்தியாளர்களிடம் டிரம்ப் குறிப்பிட்டார்.
சரமாரியாக தாக்கிய இஸ்ரேல்.. போச்சு " வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின், பல விஷயங்கள் ஜி7 மாநாட்டில் பேசப்பட்டன. ஆனால், மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டிருக்கும் சூழ்நிலை காரணமாக, டிரம்ப் தலைவர்களுடன் இரவு உணவு அருந்திய பிறகு அவசரமாக புறப்படுவார்" என்று உறுதிப்படுத்தினார். டிரம்ப் உடனடியாக டெஹ்ரானை காலி செய்யுமாறு ஈரான் நாட்டு மக்களை வலியுறுத்தினார். ஈரான் அமெரிக்காவுடன் அணு ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்க வேண்டும் என்றும் அவர் மீண்டும் தெரிவித்தார். கனடாவில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில், ஈரானை சாடிய டிரம்ப் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலை வெள்ளை மாளிகையின் situation அறையில் தயாராக இருக்கும்படி கூறி உள்ளாராம். இதனால் ஈரான் மீது அமெரிக்காவும் தாக்குதல் நடத்துகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. ஈரான் மீது பயங்கர தாக்குதல் திட்டத்தை டிரம்ப் போட்டிருக்க வாய்ப்புள்ளது. ஈரானை அமெரிக்கா தாக்க வேண்டும் என்று இஸ்ரேல் தொடர்ந்து மன்றாடி வருவது குறிப்பிடத்தக்கது.
ஈரான் நான் கையெழுத்திடச் சொன்ன ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்க வேண்டும். மனித உயிர்களின் வீண் மரணத்திற்கு ஈரான் காரணமாக மாறி வருகிறது. ஈரானிடம் அணு ஆயுதம் இருக்கக் கூடாது. இதனை நான் திரும்பத் திரும்பச் சொல்கிறேன். அனைவரும் உடனடியாக டெஹ்ரானை காலி செய்யுங்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.
அதே சமயம் இஸ்ரேல்-ஈரான் மோதலைக் குறைப்பது தொடர்பான ஜி7 நாடுகளின் வரைவு அறிக்கையில் டிரம்ப் கையெழுத்திடவில்லை என்று கூறப்படுகிறது. பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான், டிரம்ப் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை முன்வைத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இதில் டிரம்ப் கையெழுத்து போடவில்லை. ஜி7 நாடுகள்: பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் அமெரிக்காவின் கூட்டமைப்பு ஆகும். இந்த நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் கனடாஸ்கிஸ் ரிசார்ட் பகுதியில் கூடினர்.
அத்துமீறும் இஸ்ரேல்" அதேபோல் உக்ரைன் மற்றும் இஸ்ரேல்-ஈரான் இடையேயான மோதல்கள் குறித்து ஜி7 நாடுகள் ஒருமித்த கருத்தை எட்ட முடியவில்லை. டிரம்ப் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு ஆதரவு தெரிவித்தார். இதனால் இந்த முறை கூட்டத்தில் பெரிய முடிவு எதுவும் எட்டப்படவில்லை.