ஈரானின் முக்கியத் தளபதியை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு
ஈரான் தளபதிகளில் ஒருவரான அலி சட்மானியை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. தெஹ்ரானில் நடைபெற்ற தாக்குதலில் அலி சட்மானி கொல்லப்பட்டார்; ஏற்கனவே தளபதியாக இருந்த கோலமலி ரஷித் கொல்லப்பட்ட நிலையில் ஜூன் 13ல் தளபதிவானவர் அலி சட்மானி.
இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது. இந்த மோதல் முடிவுக்கு வராமல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இருநாடுகள் இடையே போர் உருவாகிவிட்டதா? என்ற அளவுக்கு தாக்குதல் நடந்து வருகிறது. இந்நிலையில் தான் இஸ்ரேலை சமாளிக்க துருக்கி, பாகிஸ்தான், சவுதி அரேபியா உள்பட பிற இஸ்லாமிய நாடுகளின் ராணுவம் ஒன்றாக இணைய வேண்டும் என்று ஈரான் கூறியுள்ளது. ஏற்கனவே இந்த நாடுகள் இஸ்ரேல் தாக்குதலை கண்டித்த நிலையில் ஈரானுக்கு ஆதரவாக ராணுவத்தை களமிறக்குகிறதா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.
மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே உள்ள நீண்டகால பகை தற்போது போராக மாறும் அபாயத்தை எட்டி உள்ளது. ஈரான் அணுஆயுதம் தயாரிக்க முடிவு செய்துள்ளது.
இதனை தடுக்க இஸ்ரேலும், அமெரிக்காவும் முடிவு செய்தது. அணுஆயுதம் தயாரிக்க மாட்டோம் என உறுதியளிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார்.
இதுதொடர்பாக இருதரப்புக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இதற்கிடையே தான் 2 நாட்களுக்கு முன்பு இஸ்ரேல் திடீரென்று ஈரான் மீது வான்வெளி தாக்குதலை நடத்தியது. இஸ்ரேலின் ராணுவ தளம், அணுகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் யுரேனியத்தை செறிவூட்டும் மையங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்கியது.
Also Read
ஈரானை தாக்கினால்.. டிரம்ப் ஆட்சியே கவிழுந்துவிடும்! அமெரிக்க சாம்ராஜ்ஜியமே காலி.. எச்சரித்த வல்லுநர்
ஈரானை தாக்கினால்.. டிரம்ப் ஆட்சியே கவிழுந்துவிடும்! அமெரிக்க சாம்ராஜ்ஜியமே காலி.. எச்சரித்த வல்லுநர்
இதற்கு பதிலடியாக இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவ் மற்றும் ஜெருசலேம் மீது ஈரான் ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது. இதையடுத்து இஸ்ரேலும் தொடர்ந்து ஈரானை தாக்கி வருகிறது. ஈரான் தலைநகர் டெல்அவிவ்வில் ஏவுகணைகளை மூலம் இஸ்ரேல் தாக்கி வருகிறது. இருநாடுகளும் மாறி மாறி தாக்கி வருவதால் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் ஈரானின் புரட்சிகர காவல் படையின் ஜெனரலும், ஈரான் நாட்டின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினருமான மொஹ்ஷின் ரெசாயி ஈரான் நாட்டின் ஊடகத்தில் கூறியதாவது: நாங்கள் இஸ்லாமிய ராணுவத்தை ஒன்றிணைத்து செயல்பட விரும்புகிறோம். துருக்கி, சவுதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் பிற நாடுகளை ஒன்றிணைக்க விரும்புகிறோம்.
இஸ்ரேல் இப்போது ஈரான், ஏமன், பாலஸ்தீன் உள்ளிட்ட நாடுகளை குறிவைத்துள்ளது. இஸ்லாமிய நாடுகள் இப்போது ஒன்று சேராவிட்டால் அவர்கள் அனைவரும் இதேபோன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல் வரலாம். ஈரான் மீது இஸ்ரேல் அணுகுண்டு போட்டால் பதிலுக்கு இஸ்ரேல் மீது அணுகுண்டு போட தயார் என்று பாகிஸ்தான் உறுதியளித்துள்ளது'' என்று கூறியுள்ளார்.
இதனால் ஈரானுக்கு ஆதரவாக பாகிஸ்தான், துருக்கி, சவுதி அரேபியா ராணுவ வீரர்களை களமிறக்குகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பாக அந்த நாடுகள் சார்பில் இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இருப்பினும் இஸ்ரேல் - ஈரான் மோதலில் ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலை பாகிஸ்தான், துருக்கி, சவுதி அரேபியா உள்ளிட்டவை கண்டித்துள்ளதோடு, ஈரானுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.