இஸ்ரேல் ஈரான் இடையே தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வருகிறது. இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கிடையே ஈரானுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது அணு ஆயுத தாக்குதலை நடத்துவதாகப் பாகிஸ்தான் உறுதியளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இது நிலைமையை மேலும் மோசமாக்குவதாகவே இருக்கிறது.
அணு ஆயுதம் தொடர்பாக அமெரிக்கா ஈரான் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்தச் சூழலில் திடீரென ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்தது. முதலில் ஈரானின் அணுசக்தி நிலையங்கள், அணு ஆயுத விஞ்ஞானிகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடியாக ஈரானும் பெரிய டிரோன் தாக்குதலை நடத்தியது. மத்திய கிழக்கு பதற்றம் இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகமாகவே உள்ளது. இதற்கிடையே அணு குண்டுகள் தொடர்பாகப் பாகிஸ்தான் அதிகாரிகள் கூறியதாகப் பரவும் தகவல் நிலைமை மோசமாக்குவதாகவே உள்ளது.. மத்திய கிழக்கில் பதட்டமான சூழல் நிலவி வரும் நிலையில்,
ஈரான் மீது இஸ்ரேல் அணு குண்டு வீசினால்.. அதற்குப் பதிலடியாக இஸ்ரேல் மீது பாகிஸ்தான் அணு ஆயுத தாக்குதல் நடத்தும் என்று ஈரான் ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அணு குண்டுகள் ஈரான் டிவி சேனல் ஒன்றுக்குப் பேட்டியளித்த இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் மூத்த அதிகாரி மற்றும் ஈரான் தேசியப் பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினருமான ஜெனரல் மொஹ்சென் ரெசாயி இந்த கருத்துக்களைத் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "இஸ்ரேல் ஈரான் மீது அணு ஆயுதத்தைப் பயன்படுத்தினால்.. அதற்குப் பதிலடியாக இஸ்ரேல் மீது பாகிஸ்தான் அணு ஆயுத தாக்குதல் நடத்தும் என்று எங்களுக்கு உறுதியளித்துள்ளது" என்றார். இதுவே பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இதுவரை இஸ்ரேல் ஈரான் இடையே மட்டுமே மோதல் இருக்கிறது. இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்கா இஸ்ரேலுக்கு முழு ஆதரவு கொடுத்தாலும் கூட இதுவரை நேரடியாகத் தாக்குதலை நடத்தவில்லை.
இதனால் இஸ்ரேல் ஈரான் இடையேயான மோதலாக மட்டுமே இது இருக்கிறது. இந்தச் சூழலில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த.. அதுவும் அணு ஆயுத தாக்குதல் நடத்த ரெடியாக இருப்பதாகப் பாகிஸ்தான் கூறியதாக வெளியான தகவல் பதற்றத்தை அதிகரித்தது. பதறிய பாகிஸ்தான் இதற்கிடையே பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் இதை மறுத்துள்ளார். பாகிஸ்தான் எந்தவிதமான உறுதிமொழியையும் அளிக்கவில்லை என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
அதேநேரம் இஸ்ரேலுடனான மோதலில் ஈரானுக்கு வெளிப்படையான ஆதரவை வழங்கி உள்ளது. தெஹ்ரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடந்த பிறகு, ஈரானுக்கு ஆதரவாக நிற்போம் என்று பாகிஸ்தான் உறுதியளித்தது. மேலும், யூத நாடான இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது
அணு ஆயுதங்கள் இப்போது மொத்தம் ஒன்பது நாடுகளிடம் மட்டுமே உலகில் அணு ஆயுதங்கள் இருப்பதாக ICAN அமைப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இந்தியா பாகிஸ்தான், வடகொரியா, பிரான்ஸ், பிரிட்டன், இஸ்ரேல் ஆகிய நாடுகளிடம் மட்டுமே அணு ஆயுதங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகள் மாறி மாறி வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்த தாக்குதல்களில் இதுவரை சுமார் 248 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் ஈரானில் 230 பேரும், இஸ்ரேலில் 18 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரிப்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.