இஸ்ரேல் ஈரான் இடையே இப்போது மோதல் வெடித்துள்ளது. இந்த மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், இதனால் உலக பொருளாதாரமே பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது. இந்த மத்திய கிழக்கு மோதலால் அடுத்து என்ன நடக்க வாய்ப்புகள் உள்ளன என்பது குறித்து நாம் பார்க்கலாம் இஸ்ரேல் ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவி வந்த பதற்றம் இப்போது மிகப் பெரிய மோதலாக வெடித்துள்ளது. மத்திய கிழக்குப் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் ஆபத்தான மோதலாக இது மாறியுள்ளது.
முதலில் கடந்த ஜூன் 13ம் தேதி ஈரான் மீது இஸ்ரேல் பெரிய வான்வழித் தாக்குதலைத் தொடங்கியது. இஸ்ரேல் ஈரான் மோதல் இதில் ஈரானின் அணு உலைகள் முதல் ராணுவ தளங்கள் வரை 100க்கும் மேற்பட்ட இலக்குகள் குறிவைக்கப்பட்டன. இதற்குப் பதிலடியாக தெஹ்ரான், இஸ்ரேல் நகரங்கள் மீது ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை ஏவியது. இதில் முக்கியமான உள்கட்டமைப்புகள் சேதமடைந்தன. ஈரானில் 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட நிலையில், இஸ்ரேலில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருவதால், அங்கு மிகப் பெரிய பிராந்திய போர் ஏற்படும் அபாயம் குறித்து உலக நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
மத்திய கிழக்குப் பகுதியில் இதே நிலை தொடர்ந்தால் இந்த 5 விஷயங்கள் நடக்க வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம் உள்ளே வரும் அமெரிக்கா! இஸ்ரேலின் ஜூன் 13 தாக்குதல்களுக்கு அமெரிக்கா மறைமுகமாக ஆதரவளித்ததாக ஈரான் நம்புகிறது. இப்பகுதியில் அமெரிக்கப் படைகள் நிறுத்தப்பட்டுள்ளதால், அமெரிக்க இலக்குகளை ஈரான் குறிவைக்கலாம்.. புதிய போர்கள் வேண்டாம் என்று டொனால்ட் டிரம்ப் உறுதியளித்திருந்தாலும், ஒரே ஒரு அமெரிக்க வீரர் இறந்தால் கூட அமெரிக்கா இதில் நேரடியாகக் களமிறங்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
அணுகுண்டுகள் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் மிகப் பெரியது என்பதில் சந்தேகம் இல்லை. இருப்பினும், அதனால் ஏற்பட்ட தாக்கம் குறித்து சந்தேகங்கள் உள்ளன. ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் ஆழமான நிலத்தடி சுரங்கங்களில் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம். விஞ்ஞானிகளைக் கொல்வதால் அணுசக்தி நிபுணத்துவத்தை அழிக்க முடியாது. இஸ்ரேல் தாக்குதல்களில் யுரேனியம் பாதிக்கப்படவில்லை என்றால் ஈரான் அணுகுண்டை உருவாக்க விரைந்து நடவடிக்கை எடுக்கும்.
இதனால் அங்கு இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் மேலும் அதிகரிக்கும்! வளைகுடா நாடுகள் ஈரானால் இஸ்ரேலைக் கடுமையாகத் தாக்க முடியாவிட்டால், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அல்லது பஹ்ரைன் போன்ற வளைகுடா நாடுகளில் உள்ள எண்ணெய் வயல்கள் அல்லது அமெரிக்க விமான தளங்கள் போன்ற இலக்குகளை ஈரான் தாக்கக்கூடும். கடந்த காலங்களை நடந்ததைப் பார்க்கும்போது இதற்கு வாய்ப்புகள் மிக அதிகம் என்றே கூறப்படுகிறது.
இதுபோன்ற தாக்குதல்கள் மேலும் பல வளைகுடா நாடுகளைப் போருக்குள் இழுக்கலாம். மேலும் அமெரிக்காவின் உதவியும் அதிகரிக்கலாம். உயரும் கச்சா எண்ணெய் விலை மத்திய கிழக்கில் வெடித்த இந்த மோதலால் ஏற்கனவே கச்சா எண்ணெய் விலை உயர ஆரம்பித்துவிட்டது.. உலக எண்ணெய் வளத்தின் முக்கியமான பகுதியான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தடுத்தால் அல்லது ஏமனில் உள்ள ஹவுத்திகள் செங்கடல் கப்பல் பாதைகள் மீது தாக்குதலைத் தொடங்கினால் கச்சா எண்ணெய் விலை மேலும் உயரும்.
பல நாடுகள் இன்னும் கொரோனா ஏற்படுத்திய பொருளாதார பாதிப்புகளில் இருந்து மீளவில்லை. இந்த நேரத்தில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் அது நெருக்கடியை மேலும் அதிகரிக்கும். மேலும் கச்சா எண்ணெய் விலை உயர்வு ரஷ்யாவிற்கு நேரடியாகச் சாதகமாக இருக்கும். இது உக்ரைன் போர் செலவுகளுக்கு நிதி ஆதாரமாக இருக்கும்.. இதனால் அந்த போரும் முடியாமல் தொடரும்.
" ஈரானுக்கு டிரம்ப் வார்னிங் சரியும் ஈரான் சமீபத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பொது நிகழ்ச்சியில் பேசியிருந்தார். அப்போது அவர் ஈரான் மக்களைக் குறிப்பிட்டு, "உங்கள் சுதந்திரத்தை அடைவதற்கான பாதையை நாங்கள் அமைத்துத் தருகிறோம்" என்று கூறினார். இஸ்ரேலால் தற்போதுள்ள ஈரான் ஆட்சி விழுந்தால்..
ஈரானுக்குச் சுதந்திரம் கிடைக்கும் எனச் சொல்ல முடியாது. சதாம் உசேனுக்குப் பிறகு ஈராக்கில் ஏற்பட்டதை போல மிகப் பெரிய உள்நாட்டுப் போர் ஏற்படலாம். இந்த 5ல் எது நடந்தாலும் அது சர்வதேச பொருளாதாரத்தை மிகக் கடுமையாகப் பாதிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இஸ்ரேல் ஈரான் இடையேயான மோதல் மேலும் அதிகரிக்காமல் சீக்கிரம் முடிவுக்கு வருவதே உலகிற்கு நல்லது என்கிறார்கள் வல்லுநர்கள்!