டெல் அவிவ்: இஸ்ரேல், ஈரானில் அணு மற்றும் ராணுவ தளங்களை தாக்கிய பின், உலக நாடுகள் இந்த சம்பவத்தை பல்வேறு விதமாக எதிர்கொண்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் ஈரானுக்கு ஆதரவாக இருந்த நாடுகள், தற்போதைய சூழலில் எவ்வாறு kjgldlg lzjfbfldlgNdNV என்பதையும், இப்போது யார் நேரடி அரசியல் ஆதரவு வழங்குகிறார்கள் என்பதையும் விரிவாக பார்க்கலாம்.
ரஷ்யா: இரு நாடுகளும் நீண்டகாலம் அரசியல், ராணுவ மற்றும் பொருளாதார உறவுகளை பேணுகின்றன. ரஷ்யா, ஈரானின் அணு திட்டத்திற்கு எதிராக மேற்கத்திய நாடுகள் விதிக்கும் தடைகளை பல்வேறு சமயங்களில் எதிர்த்துள்ளது. இரு நாடுகளும் சிரியா உள்ளிட்ட மத்திய கிழக்கு பிரச்சனைகளில் கூட்டாக செயல்பட்டுள்ளன.
சீனா: சீனா, ஈரானின் மிக முக்கிய வர்த்தக மற்றும் ராணுவ கூட்டாளி. இரு நாடுகளும் எண்ணெய், எரிவாயு, தொழில்நுட்பம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைக்கின்றன. சீனா, மேற்கத்திய நாடுகளின் தடைகளை திறம்பட எதிர்த்து, ஈரானுக்கு சர்வதேச அரங்குகளில் ஆதரவு வழங்கி வருகிறது.
பாகிஸ்தான்: பாகிஸ்தான், ஈரானுடன் நல்லுறவு பேணும் ஒரே இஸ்லாமிய அண்டை நாடாகும். இன்றைய, இஸ்ரேல் தாக்குதலுக்கும், பாகிஸ்தான் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது. "ஈரானின் மக்கள் மற்றும் அரசுக்கு பாகிஸ்தான் உறுதியான ஆதரவை வழங்குகிறது" என வெளிவிவகார அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஓமான்: ஓமான், ஈரான்-அமெரிக்கா, ஈரான்-சவுதி அரேபியா போன்ற நாடுகளுக்கு இடையே நடுநிலை பேச்சுவார்த்தை நடத்தும் முக்கிய நாடாகும். கடந்த பல ஆண்டுகளாக ஈரானுடன் நெருக்கமான பொருளாதார மற்றும் ராணுவ ஒத்துழைப்பு உள்ளது.
கத்தார்: கத்தார், ஈரானுடன் நல்லுறவு பேணும் வளைகுடா நாடுகளில் ஒன்று. சமீபத்திய தாக்குதலை "பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல்" என கண்டனம் தெரிவித்துள்ளது.
சிரியா, லெபனான் (ஹெஸ்பொல்லா), ஈராக், யேமன் (ஹூதி): ஈரானின் முக்கியமான பிராந்திய கூட்டாளிகள். இந்த நாடுகளில் ஈரான் ஆதரவுடன் செயல்படும் அமைப்புகள் (கிளர்ச்சியாளர்கள்) உள்ளனர்.
பாகிஸ்தான்: இஸ்ரேல் தாக்குதலை "நியாயமற்ற மற்றும் சட்டவிரோதமான தாக்குதல்" எனக் கடுமையாக கண்டித்து, ஈரானுக்கு முழுமையான ஆதரவை அறிவித்துள்ளது.
சவுதி அரேபியா: சமீப காலத்தில் ஈரானுடன் உறவை மேம்படுத்திய சவுதி அரேபியா, இஸ்ரேல் தாக்குதலை "அரசியல் மற்றும் சர்வதேச சட்டங்களை மீறுகிறது" என கண்டனம் தெரிவித்துள்ளது.
ஓமான்: "இது மிகப்பெரிய அபாயகரமான நடவடிக்கை, பிராந்திய அமைதிக்கு பெரும் அச்சுறுத்தல்" எனக் கண்டனம் தெரிவித்துள்ளது.
ரஷ்யா, சீனா: இஸ்ரேல்-ஈரான் பதற்றம் அதிகரிக்கக் கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளன. இரு நாடுகளும் அமைதி வேண்டி, பிராந்தியத்தில் நிலைமை கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என வலியுறுத்துகின்றன.
லெபனான், சிரியா: இஸ்ரேல் தாக்குதலை கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளன.
அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலில் நேரடி ஆதரவு இல்லை என்று அறிவித்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தியா, ஐரோப்பிய நாடுகள் ஆகியவை பதற்றம் அதிகரிக்கக் கூடாது என அமைதியை வேண்டியுள்ளன.