178 ஆண்டுகளில் முதல் முறையாக அமெரிக்க மருத்துவ சங்க தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் தேர்வு
12 Jun,2025
அமெரிக்க மருத்துவ சங்கத்தின்’ தலைவர் பதவியேற்பு விழா சிகாகோவில் நேற்று நடந்தது. இதில், அமெரிக்க மருத்துவ சங்க தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த னிவாஸ் முக்கமாலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த 178 ஆண்டுகளில் இந்தியர் ஒருவர் இப்பதவிக்கு வருவது இதுவே முதல்முறையாகும். விழாவில் அவர் பேசுகையில், ‘நான் ஒரு மருத்துவர். எனக்கு தரமான சிகிச்சை கிடைப்பது இயல்பானதுதான். ஆனால், சாமானிய மக்களுக்கும் கேள்விகுறியாக உள்ளது. இன்சூரன்ஸ் எடுத்து கொண்டால் பிரச்னை இல்லை என்கிறார்கள். அதன் தொகை அதிகம் என்பதால் எல்லோராலும் எடுக்க முடியாது. தவிர, மருந்துகளின் விலை மற்றும் மருத்துவ நிபுணர்களை சந்திக்க தாமதம் போன்றவற்றால் சாமானிய மக்களுக்கு தரமான மருத்துவம் கிடைப்பது சவாலாக உள்ளது. மருத்துவர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நமது மருத்துவ துறையில் உள்ள தலைவர்கள் ஒருமித்த குரலில் பேச அமெரிக்க மருத்துவ சங்கம் மிகவும் அவசியம்.
தலைவராக நான் பொறுப்பேற்று கொள்வதற்கு முன்னர், மருத்துவ சங்கத்தின் பிரதிநிதிகள் கூட்டம் நடந்தது. அதில் ஆரோக்கியமற்ற, பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கும், ஆரோக்கியமான உணவுகளுக்கும் உள்ள வேறுபாடுகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற கொள்கை ஏற்று கொள்ளப்பட்டிருக்கிறது. மருத்துவர்களாக நாம் இக்கொள்கையை சிறப்பான முறையில் செயல்படுத்துவோம்’ என்றார். னிவாசுக்கு மூளையில் சுமார் 8 செமீ அளவில் கட்டி இருந்தது. இது ஒரு வகையான புற்றுநோய் என்றுகூட சொல்லலாம். இந்த கட்டி அவரது உயிருக்கே ஆபத்தானதாக இருந்தது. ஆனால் நல்வாய்ப்பாக முன்னரே கண்டுபிடிக்கப்பட்டதால் அகற்றப்பட்டது. இந்த அளவுக்கு தரமான மருத்துவ சேவை அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே அவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.