எனது மனைவியை கூட விட்டு வைக்கல.." அசிம் முனீர் ! ஆவேசமான இம்ரான் கான்
04 Jun,2025
கடந்த மாதம் இந்தியா பாகிஸ்தான் இடையேயான மோதல் உச்சமடைய ராணுவ தளபதி அசிம் முனீரும் முக்கியமான காரணம். அவரது எடுத்த சில ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளே நிலைமையை மோசமாக்கியது. இதற்கிடையே இந்த அசிம் முனீர் மீது பாகிஸ்தான் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சில பகீர் புகார்கள் முன்வைத்துள்ளார் இந்தியா பாகிஸ்தான் மோதலுக்கு முக்கிய காரணமாக இருந்தவர்களில் ஒருவர் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர். இவர் எடுத்த சில நடவடிக்கைகளே இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றத்தை அதிகரித்தது. பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களைக் குறிவைத்தே இந்தியா தாக்குதல் நடத்தியிருந்தது.
ஆனால், இவரது உத்தரவின்படி இந்தியாவில் மக்கள் வாழும் பகுதிகளை நோக்கியும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயன்றது. இதுவே மோதல் அதிகரிக்கப் பிரதான காரணம். அசிம் முனீர் இந்த மோதலில் தோற்றுப்போன பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யலாம் என அழைப்பு விடுத்தது. இப்படி பாகிஸ்தான் அடி வாங்கியிருந்த போதிலும், இந்த அசிம் முனீருக்கு பாகிஸ்தான் ராணுவத்தின் மிக உயர்ந்த பதவியான பீல்ட் மார்ஷல் பதவி வழங்கியது தனிக்கதை.
அதேநேரம் அசிம் முனீர் இதற்கு முன்பு உள்நாட்டிலும் கூட சர்ச்சையைக் கிளப்பியவர் தான். முன்பு இம்ரான் கான் அரசு இருந்த போது, இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸின் இயக்குநர் ஜெனரல் பதவியில் இருந்து முனீரை அப்போதைய பிரதமர் இம்ரான் கான் நீக்கியிருந்தார். அதன் பிறகே மற்ற கட்சிகளை வைத்துக் குழப்பத்தை ஏற்படுத்திய இம்ரான் கான் அரசு கவிழ்க்கப்பட்டது. அதிலும் கூட முனீருக்கு முக்கிய பங்கு இருப்பதாகச் சொல்லப்பட்டது. இம்ரான் கான் இதற்கிடையே ராணுவத் தளபதி ஜெனரல் ஆசிம் முனீர் மீது பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சில கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். முனீர் பதவியை நீக்கியதால் தனது மனைவி புஷ்ரா பிபியை பழிவாங்கியதாகப் பரபர குற்றச்சாட்டுகளை முன்வைத்து இருக்கிறார்.
மனைவியை அணுகினார் இது தொடர்பாக இம்ரான் கான் தனது ட்விட்டரில், "நான் பிரதமராக இருந்தபோது ஜெனரல் ஆசிம் முனீரை ஐஎஸ்ஐ இயக்குநர் ஜெனரல் பதவியில் இருந்து நீக்கினேன். அப்போது அவர், இதுகுறித்து பேச எனது மனைவி புஷ்ரா பிபியிடம் போனார்.
ஆனால் புஷ்ரா பிபி பேச மறுத்துவிட்டார். இதுபோன்ற விஷயங்களில் தனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்றும் நேரில் சந்திக்க முடியாது என்றும் மறுத்துவிட்டார். இதற்குப் பழிவாங்கவே எனது மனைவி புஷ்ரா பிபியை 14 மாதங்கள் சிறையில் தள்ளினார் ஜெனரல் ஆசிம் முனீர். இதுதான் அவரது பழிவாங்கும் நடவடிக்கை. Also Read "பாகிஸ்தான் ஒரு தோல்வி அடைந்த நாடு.." ஆவேசமாக விமர்சித்த பிரிட்டன் எம்பி.. இந்தியாவுக்கு முழு ஆதரவு! பழிவாங்கும் முயற்சி இதுவரை யாரும் இதுபோல எனது மனைவியை அரசியல் காரணங்களுக்காக பழிவாங்கியது இல்லை.
பாகிஸ்தானின் சர்வாதிகார ஆட்சிக் காலங்களில்கூட இதுபோன்ற சம்பவம் நடந்ததில்லை. எந்த ஆதாரமும் இல்லாமல் பொய்யான வழக்குகளில் எனது மனைவி கைது செய்யப்பட்டார். அரசியலில் கூட ஈடுபடாத சாதாரண பெண் அவர். சிறையில் அடைத்தது மட்டுமின்றி சுமார் 4 வாரங்கள் என்னைக் கூட சந்திக்க அனுமதிக்கவில்லை. விதிமுறைகளின்படி ஜூன் 1ம் தேதி நான் அவரை சந்திக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் நீதிமன்ற உத்தரவை மீறி என்னை அனுமதிக்க மறுத்துவிட்டனர்" என்று சாடியுள்ளார்.