இரும்பு, அலுமினிய இறக்குமதிக்கு வரிகளை இரட்டிப்பாக்கும் அமெரிக்கா
31 May,2025
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை, தனது உலகளாவிய வர்த்தகப் போரின் சமீபத்திய தீவிரமாக, இரும்பு மற்றும் அலுமினிய இறக்குமதி மீதான வரிகளை 25 சதவீதட்டிப்பாக்குவதாக அறிவித்தார்.
பிட்ஸ்பர்க்கிற்கு அருகிலுள்ள US Steel’s Mon Valley Works–Irvin ஆலையில் பேசிய டிரம்ப், இரும்பு இறக்குமதி மீதான வரி 50 சதவீதமாக இரட்டிப்பாக்கப்படும் என்றும், அலுமினியத்திற்கும் இதேபோன்ற உயர்வு விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார். இந்த நடவடிக்கைகள் புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வரவுள்ளன.
ஜனவரியில் டிரம்ப் மீண்டும் பதவியேற்றதில் இருந்து அமெரிக்காவில் இரும்பு விலைகள் 16 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில் இந்த முடிவு வந்துள்ளது. அமெரிக்க வர்த்தகத் துறையின் புள்ளிவிவரங்களின்படி, மார்ச் 2025 நிலவரப்படி, அமெரிக்க எஃகு ஒரு மெட்ரிக் டன்னுக்கு 984 டாலர் ஆகவும், ஐரோப்பாவில் 690 டாலர் ஆகவும், சீனாவில் 392 டாலர் ஆகவும் இருந்தது.
ஜப்பானின் நிப்பான் ஸ்டீல் அமெரிக்க எஃகு நிறுவனத்தில் முதலீடு செய்யும் ஒப்பந்தத்தையும் டிரம்ப் குறிப்பிட்டார்