சிரியா அதிபர் மாளிகை அருகே இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்
03 May,2025
சிரியா அரசாங்க ஆதரவு போராட்டக்காரர்கள் மற்றும் தலைநகர் டமாஸ்கஸ்க்கு அருகில் ட்ரூஸ் சிறுபான்மை பிரிவை சேர்ந்த போராட்டக்காரர்களுக்கு இடையே பல நாட்கள் மோதல்கள் நடந்து வந்தது. இந்நிலையில் சிரியா அதிபர் மாளிகை அருகே இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த வாரம் இஸ்ரேல் நடத்திய இரண்டாவது தாக்குதல் இதுவாகும். அதிபர் மாளிகைக்கு அருகில் உள்ள பகுதியில் தாக்குதல் நடத்துவது ஹயாத் தஹ்ரிர் அல் -ஷாம் தலைமையிலான இஸ்லாமிய குழுக்களால் ஆன சிரியாவின் புதிய தலைமைக்கு ஒரு வலுவான எச்சரிக்கையை தெரிவிப்பதற்காக என்று கூறப்படுகிறது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஆகியோர் வெளியிட்ட கூட்டு அறிக்கையில், ‘‘இந்த தாக்குதல் சிரிய தலைவர்களுக்கு ஒரு தெளிவான செய்தி. டமாஸ்கஸின் தெற்கில் இருந்து படைகள் திரும்ப பெறப்படுவதையும், ட்ரூஸ் சமூகத்திற்கு எந்த ஆபத்தையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.