காசாவுக்கு உதவிப்பொருட்களை ஏற்றிச்சென்ற கப்பல் மீது டிரோன் தாக்குதல்
02 May,2025
காசாவுக்கு உதவிப்பொருட்கள் ஏற்றிச்சென்ற கப்பல் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக மால்டா அரசு தெரிவித்துள்ளது.
மால்டா அருகே தாக்குதல் நடத்தப்பட்ட அந்த கப்பலில் 12 ஊழியர்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
எனினும் கப்பலில் இருந்தவர்களின் உயிருக்கு எந்த பாதிப்பும் இல்லை என மால்டா அரசு தெரிவித்துள்ளது.
ஆனால் கப்பல் செல்ல முடியாமல் அதே இடத்தில் நிற்பதாகவும், மூழ்குவதற்கு வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
கடந்த 2010-ஆம் ஆண்டு இதேபோன்று காசாவுக்கு உதவிப் பொருட்கள் கொண்டு சென்ற துருக்கி கப்பல் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
இதில் 9 பேர் கொல்லப்பட்டனர். இதன் காரணமாக இஸ்ரேல்- துருக்கி இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது