பாகிஸ்தான் விமான நிலையத்தில் தீ விபத்து
26 Apr,2025
பாகிஸ்தானின் லாகூர் நகரத்தில் அமைந்துள்ள அல்லாமா இக்பால் சர்வதேச விமான நிலையத்தில் இன்று சனிக்கிழமை (26) தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அல்லாமா இக்பால் சர்வதேச விமான நிலையத்தில் பாகிஸ்தானின் இராணுவ விமானம் ஒன்று தரையிறங்கும் போது அதன் சக்கரம் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
இதனால் இன்று புறப்படவிருந்த அனைத்து விமான சேவைகளும் இரத்து செய்யப்பட்டன.
தீயை கட்டுப்படுத்த பல தீயணைப்பு வாகனங்கள் குறித்த விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
விமான நிலையத்தில் இருந்தவர்கள் தீ விபத்தினால் ஏற்பட்ட புகை காரணமாக கடும் சிரமத்துக்குள்ளாகியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எவ்வாறிருப்பினும் இந்த தீ விபத்தினால் உயிரிழப்புகளே அல்லது சேதங்களே ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவல்களும் வெளியாகவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.