இந்திய ராணுவ வீரரை சிறைப்பிடித்த பாகிஸ்தான்! எல்லை தாண்டியதாக கூறி கைது செய்தது!
24 Apr,2025
இந்தியா - பாகிஸ்தான் இடையே உச்ச கட்ட பதற்றம் நிலவும் நிலையில், இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் பாகிஸ்தானியர்களிடம் சிக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் ரேஞ்சர்களிடம் பிடிபட்டுள்ள இந்திய வீரர் கொல்கத்தாவை சேர்ந்த பிகே சிங் என்பதும், 17 ஆண்டுகளாக அவர் ராணுவத்தில் பணியாற்றி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சிறைப்பிடிக்கப்பட்டுள்ள இந்திய வீரரிடம் இருந்து துப்பாக்கி, வாக்கி டாக்கி உள்ளிட்டவற்றை பாகிஸ்தான் பறிமுதல் செய்துள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையே உச்ச கட்ட பதற்றம் நிலவும் நிலையில், பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் சர்வதேச எல்லையை தாண்டியதாக கூறி இந்திய ராணுவ வீரரை பாகிஸ்தான் கைது செய்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப்பயணிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பயணிகள் கொல்லப்பட்டனர். மினி சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும் பைசன் பள்ளத்தாக்கு பகுதியில் இயற்கை அழகை ரசித்துக்கொண்டு இருந்த சுற்றுலாப்பயணிகள் மீது, ஈவு இரக்கமின்றி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்
உள்ளூர் போலீஸாரின் சீருடையில் வந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியிருக்கிறார்கள். குறிப்பாக அங்கு இருந்த ஆண் சுற்றுலாப்பயணிகளிடம் பெயர் மற்றும் மதத்தை கேட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை சும்மா விட மாட்டோம் என்று இந்தியா எச்சரித்து உள்ளது. இதற்கிடையே, எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் பாகிஸ்தான் ரேஞ்சர்களிடம் நேற்று (ஏப்ரல் 23)பிடிபட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. பஞ்சாபில் உள்ள பிரோஸ்புர் பகுதியில் சர்வதேச எல்லைப்பகுதியை தவறுதலாக இந்திய வீரர் பணியில் இருந்த தாண்டியுள்ளார்.
பாகிஸ்தான் வீரர்களிடம் பிடிபட்டுள்ள ராணுவ வீரரை பத்திரமாக மீட்க கொடி ஆலோசனைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த சீனியர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளர். இந்தியா - பாகிஸ்தான் இடையே உச்ச கட்ட பதற்றம் நிலவும் நிலையில், இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் பாகிஸ்தானியர்களிடம் சிக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையே உச்ச கட்ட பதற்றம் நிலவும் நிலையில், பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் சர்வதேச எல்லையை தாண்டியதாக கூறி இந்திய ராணுவ வீரரை பாகிஸ்தான் கைது செய்துள்ளது.