இந்த 10 வயது சிறுவன்! ரஷ்ய அதிபர் புதினின் ரகசிய மகனா?
23 Apr,2025
ரஷ்ய அதிபர் புதினின் ரகசிய மகன் என்று 10-வயது மதிக்கத்தக்க சிறுவனின் புகைப்படம் ஒன்று டெலிகிராம் சேனலில் பரவி வருகிறது. புதினின் முன்னாள் தோழி அலினா கபேவாவுடன் பாதுகாக்கப்பட்ட அரண்மனை ஒன்றில் இந்த சிறுவன் வசித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. ரஷ்ய அதிபராக இருப்பவர் புதின் (வயது 72). உலகின் மிகவும் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராக உள்ளார். ரஷ்ய அதிபராக கடந்த 2012 ஆம் ஆண்டு அதிகாரமிக்க பொறுப்புக்கு வந்தார்.
அதற்கு முன்பாக பிரதமராக பதவி வகித்தார். ரஷ்யாவில் அதிகாரமிக்க பொறுப்புகளில் கிட்டதட்ட 20 ஆண்டுகளாக புதினே இருந்து வருகிறார். புதினை பற்றிய அவ்வப்போது பல பரபரப்புகளும் சர்ச்சைகளும் கிளம்புகின்றன. முதல் மனைவியுடன் விவாகரத்து புதினின் உடல் நிலை குறித்த தகவல்களும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய சில தகவல்களும் பரவி சர்வதேச அளவில் பரபரப்பை கிளப்பும். புதின் தனது முதல் மனைவியான லியூட்மிலா ஷ்கேர்னிபாவை 2014 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். தனது முதல் மனைவியின் மூலம் புதினிற்கு இரண்டு மகள்கள் உள்ளனர். முதல் மகள் மரியா ஆவார். 1985 ஆம் ஆண்டு செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் பிறந்தார்.
பரபர தகவல்கள் இரண்டாவது மகள் 1986 ஆம் ஆண்டு ஜெர்மனியில் பிறந்தார். முதல் மனைவியிடம் விவாகரத்து பெற்ற புதின், ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான அலினா கபேவா என்பவருடன் தொடர்பில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், புதினின் ரகசிய மகன் என்று கூறி 10 வயது சிறுவன் புகைப்படம் ஒன்று டெலிகிராம் சேனலில் பரவி வருகிறது. 'இவன் விளாடிம்ரோவிச் புதின்' என்ற பெயர் கொண்ட அந்த சிறுவன்தான் புதினின் ரகசிய மகன் என்று பிரபல இங்கிலாந்து நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. புதினுக்கு எத்தனை மகள்கள்? VChK-OGPU என்ற டெலிகிராம் சேனலில் இந்த புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. சாதாரண ரஷ்ய மக்களை போல் இன்றி மிகவும் ரகசியமாக இந்த சிறுவன் வளர்க்கப்பட்டு வருவதாகவும், ரஷ்யாவில் அநேகமாக மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட சிறுவன் இவராகத்தான் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. பிற குழந்தைகளுடன் கூட பெரிதாக பேச நேரம் இன்றி எப்போதும் பாதுகாப்பு படை வீரர்கள் புடைசூழ இந்த சிறுவன் இருக்கிறானாம்.
புதின் இளம் வயதில் எப்படி இருந்தாரோ அதே முக சாயலில் இந்த சிறுவனும் இருப்பதாகவும் அந்த நாளேடு செய்தியில் கூறப்பட்டுள்ளது. புதினின் இரு மகள்களும் பல்கலைக்கழகங்களில் போலியான அடையாளங்களுடன் தான் படித்தனர். முதல் மகள் மரியா பயாலஜி படிப்பையும் இரண்டாவது மகள் கதேரினா ஆசியன் ஸ்டடிஸ் படிப்பையும் முடித்துள்ளார்.
புதினின் முன்னாள் தோழி
மரியா மருத்துவ ஆய்வாளராகவும், கதேரினா, அக்ரோபாட்டிக் நடனக் கலைஞராகவும் டெக் நிர்வகியாகவும் உள்ளாராம். ஒலிம்பிக் சாம்பியனும், உடற்பயிற்சியாளருமான அலினா கபேவா (39வயது) என்பவருடன் புதின் நீண்ட காலம் தொடர்பில் இருந்துள்ளார். இவருக்காக மாஸ்கோவில் இருந்து வடமேற்கில் உள்ள லேக் வால்டாய் என்னும் இடத்தில் பிரமாண்ட அரண்மனையை புதின் கட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.
120 மில்லியன் டாலர் மதிப்பில் வாங்கப்பட்ட அந்த சொத்தில், புதினின் முன்னாள் தோழியான அலினா கபேவாவுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவன் விளாடிமிரோவிச் புதின் மற்றும் விளாடிமிர் ஜூனியர் என இரு மகன்கள் உள்ளனர். இது போக புதினுக்கு இன்னொரு மகளும் இருப்பதாக சொல்லப்படுகிறது.