நேபாளத்தில் சீனா கட்டிய ஏர்போர்ட்டில் ரூ.1400 கோடி ஊழல்
19 Apr,2025
காத்மண்டு: நேபாளத்தில் உள்ள பொகாராவில் புதிய சர்வதேச விமான நிலையம் கட்டப்பட்டு கடந்த 2023ம் ஆண்டு முதல் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளது. சீனாவை சேர்ந்த நிறுவனம் ரூ.1835 கோடி மதிப்பிலான விமான நிலையத்தை கட்டியுள்ளது. அதிக செலவில் கட்டப்பட்டுள்ள விமான நிலையத்தில் போதுமான வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில் நேபாள நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திர லிங்டன் தலைமையிலான நாடாளுமன்ற பொது கணக்கு குழு பொக்காரா விமான நிலைய பணிகளில் மிக பெரிய ஊழல் நடந்துள்ளது என குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அறிக்கையில், விமான நிலைய கட்டுமானங்களில் ரூ.1400 கோடி ஊழல் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. இது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.