இஸ்ரேல் பயணிகளுக்கு தடை விதித்தது மாலத்தீவு அரசு!
16 Apr,2025
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு மாலத்தீவு தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறது. இந்நிலையில் இஸ்ரேலிய சுற்றுலா பயணிகளுக்கு மாலத்தீவு தடை விதித்திருக்கிறது. அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இது தொடர்பான சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்த திருத்தத்திற்கு அந்நாட்டு அதிபர் முகமது முய்சு ஒப்புதல் அளித்துள்ளார். போரும் தாக்கமும் கடந்த 18 மாதங்களுக்கும் மேலாக காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்து வருகிறது. காசாவில் ஹமாஸ் அமைப்பினர் இருக்கின்றனர்.
அவர்களை ஒழிப்பதுதான் நோக்கம் என்று கூறி இந்த போரை இஸ்ரேல் நடத்தி வருகிறது. போருக்கு அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு கரம் நீட்டியுள்ளன. ஆனால் இந்த 18 மாதங்களில் 61,700க்கும் அதிகமான பாலஸ்தீனர்களை இஸ்ரேல் ராணுவம் கொன்று குவித்திருக்கிறது. இதற்கு சர்வதேச அளவில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
போர் நிறுத்தம் ஒரு கட்டத்தில் சீனாவும், ரஷ்யாவும் போரை நிறுத்த தீவிர முயற்சிகளை மேற்கொள்ள தொடங்கின. இதனையடுத்து போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. கைதிகள் சிலர் இரு தரப்பிலும் பரிமாற்றம் செய்யப்பட்டனர். ஆனால் போர் நிறுத்தம் அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி நகரவில்லை. குறிப்பாக இஸ்ரேல் படைகள் காசாவிலிருந்து முழுமையாக விலக்கிக்கொள்ளப்பட வேண்டும். இதை இஸ்ரேல் ஏற்கவில்லை. எனவே போர் நிறுத்தம் இன்னும் முழுமையடையவில்லை.
சுற்றுலா பயணிகளுக்கு தடை இப்படி இருக்கையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக உலக நாடுகள் சில எதிர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. ஏற்கெனவே பாகிஸ்தானும், வங்கதேசமும் இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகளுக்கு தடை விதித்திருந்தது. இந்த வரிசையில் தற்போது மாலத்தீவும் இணைந்திருக்கிறது. இஸ்ரேல் நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு மாலத்தீவு தடை விதித்திருக்கிறது. இன்றைய தேதியில் மாலத்தீவில் சுமார், 7,29,932 இஸ்ரேலிய பயணிகள் இருக்கின்றனர். இது கடந்த ஆண்டு எண்ணிக்கை கிடையாது. இதுவரை வந்தவர்களின் எண்ணிக்கையாகும். இஸ்ரேல் எண்ணிக்கை எவ்வளவு மாலத்தீவின் சுற்றுலாத்துறை தகவலின்படி அந்நாட்டுக்கு அதிக அளிவல் சீனாவிலிருந்துதான் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். முதல் 10 நாடுகளில் பட்டியலில் இஸ்ரேல் கிடையாது. இஸ்ரேலிலிருந்து கடந்த ஆண்டு 1,440 பேரும், 2023ல் 11,000 பேரும் வந்திருக்கின்றன. இந்த எண்ணிக்கை மிக மிக குறைவு என்பதால் இவர்களின் தடை, மாலத்தீவு சுற்றுலாத்துறையை பெரியதாக பாதிக்காது. ஆனால் இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் கனவம் பெரும்.
சர்வதேச சட்டங்களை மீறும் நாடுகளின் தவறை சுட்டிக்காட்ட வேண்டும், இஸ்ரேலை கண்டிக்க வேண்டும் என நாங்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறோம் என்று மாலத்தீவு அரசு கூறியுள்ளது. அந்நாட்டு குடியேற்ற சட்டத்தில் இதற்காக திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. நேற்று இந்த திருத்தத்திற்கு முய்சு ஒப்புதல் கொடுத்திருக்கிறார். அதன் அடிப்படையில் திருத்தம் உடனடியாக அமலுக்கு வருகிறது. இலங்கையும் கூட இலங்கையும் கூட இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் மீது ஒரு கண்ணை வைத்திருக்கிறது.
அவர்களுக்கு நேரடி தடைகளை விதிக்கவில்லை என்றாலும் கூட, இலங்கைக்கு வரும் இஸ்ரேலிய பயணிகள் 'அருகம் பேய்' பகுதியில் அதிக அளவில் தங்கியுள்ளனர். இது உள்ளூர் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே அந்த பகுதியிலிருந்து இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் வெளியேற வேண்டும் என்று இலங்கை அரசு உத்தரவிட்டிருக்கிறது. மட்டுமல்லாது அந்த பகுதியில் பாதுகாப்பை தீவிரப்படுத்தியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.