அமெரிக்கா மீது 34% இறக்குமதி வரியை அறிவித்த சீனா!
04 Apr,2025
அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த ஏப்ரல் 2ம் தேதி உலகின் பல்வேறு நாடுகள் மீதும் ரெசிப்ரோக்கல் வரியை அறிவித்தார். இது சர்வதேச அளவில் ஒரு வர்த்தக போரை உருவாக்கியுள்ளது. இதற்கிடையே அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் சீனா இப்போது அமெரிக்க இறக்குமதிகளுக்கு 34% வரி விதிக்கப்போவதாக அறிவித்துள்ளது.
கடந்த 2ம் தேதி வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிபர் டிரம்ப், ரெசிப்ரோக்கல் வரியை அறிவித்தார். அதாவது உலக நாடுகள் அமெரிக்கா மீது எவ்வளவு வரி போடுகிறதோ.. அதே அளவுக்கு அமெரிக்காவும் பதிலுக்கு வரி வசூலிக்கும் என்பதே இதன் அடிப்படையாகும். கடந்த சில மாதங்களாகவே டிரம்ப் இது குறித்துப் பேசி வந்த நிலையில், புதன்கிழமை இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். Also Read இந்தியாவை அலறவிட்ட டிரம்ப்..
27% வரியால் தங்க நகைக்கு வந்த பெரிய ஆபத்து! இனி அவ்வளவுதானா? கையில் சார்ட் ஒன்றுடன் செய்தியாளர்களைச் சந்தித்த டிரம்ப், எந்த நாட்டின் மீது எவ்வளவு வரி என்பதை விவரித்தார். அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்கள் மீதும் 10% வரி விதிக்கப் போவதாக அறிவித்த டிரம்ப், வரி செலுத்த விரும்பாத நிறுவனங்கள்
அமெரிக்காவிலேயே தங்கள் பொருட்களைத் தயாரிக்க வேண்டும் எனக் கூறினார். டிரம்ப் உலக நாடுகள் மீது 10% முதல் 50% வரை வரிகள் அறிவித்துள்ளார். அதிகபட்சமாக கம்போடியா மீது 49% இறக்குமதி வரி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வியட்நாம் மீது 46%, இலங்கை மீது 44% வரி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா மீது 26% வரி விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் சீனா மீது டிரம்ப் 34% வரியை அறிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு அதிகபட்ச பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படும் நிலையில், இது சீன நிறுவனங்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
மேலும், உலகின் பல்வேறு நாடுகளும் ஏற்கனவே டிரம்பின் வரிக்கு எதிராகப் பதிலடி கொடுக்கும் வகையில் வரிகளை அறிவித்து வருகிறார்கள். முதல் நாடாகக் கனடா ஏற்கனவே அமெரிக்க இறக்குமதிகளுக்கு வரியை அறிவித்துவிட்டனர்.
""கிரீன் கார்டு.." டிரம்ப் முடிவால் பல லட்சம் அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஆபத்து! 4 மேஜர் சிக்கல்" இதற்கிடையே இப்போது சீனாவும் அமெரிக்க இறக்குமதிகளுக்கு வரிகளை அறிவித்துள்ளனர். அதாவது அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 34% வரி விதிக்கப்போவதாகச் சீனா அறிவித்துள்ளது. வரும் ஏப்ரல் 10ம் தேதி முதல் இந்த வரி அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அமெரிக்காவின் வரி ஏப்ரல் 9ம் தேதி அமலுக்கு வரும் சூழலில், அதற்கு மறுநாள் சீனாவின் இந்த வரி அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.