பூமிக்கு அடி யில் ஏவுகணை நகரம் : உலகை அச்சுறுத்தும் ஈரான்
27 Mar,2025
ஈரானில்(iran) பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சுரங்கத்தில், நூற்றுக்கணக்கான நவீன ரக ஏவுகணைகளை ஈரான் ராணுவம் சேமித்து வைத்துள்ளது. இந்த 'ஏவுகணை நகரம்' தொடர்பான காணொளியை ஈரான் அரசு வெளியிட்டுள்ளது.
இந்த காணொளிஅமெரிக்கா(us), இஸ்ரேல்(israel) உள்பட ஈரானின் எதிரிகளாக கருதப்படும் நாடுகளுக்கு ஈரான் அரசு வெளியிட்ட எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.
ராணுவ பலத்தை வெளிக்காட்டும் காணொளி
ஏற்கனவே இது போன்ற ஏவுகணை நகரம் மற்றும் கடற்படை சுரங்கம் தொடர்பான காணொளியை ஈரான் வெளியிட்டிருந்தது. இந்நிலையில், ஈரான் அரசு தற்போது தங்கள் ராணுவ பலத்தை வெளிக்காட்டும் 85 வினாடிகள் கொண்ட காணொளியை வெளியிட்டுள்ளது.
மேலும், நேற்று தொடங்கினால் அடுத்த 2 ஆண்டுகளுக்கு, வாரத்திற்கு ஒரு ஏவுகணை நகரை உலகிற்கு அறிமுகப்படுத்துவோம் என ஈரான் கூறியுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் சூழலுக்கு மத்தியில், ஈரான் அரசு வெளியிட்டுள்ள காணொளி மேலும் பதற்றத்தை ஏற்படுத்தக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.