ஹமாசை விரட்டியடிக்கப்போகும் காசா மக்கள்? நாட்டை விட்டு வெளியேறக்கோரி போராட்டம்.
27 Mar,2025
.
காசாவை கடந்த 20 ஆண்டுகளாக ஹமாஸ் அமைப்பு தான் கட்டுப்படுத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பினரை அழிப்பதாக கூறி இஸ்ரேல் காசாவில் போரை தொடங்கி உள்ளது. இந்த போர் தற்போது மீண்டும் உக்கிரமாக நடந்து வரும் நிலையில் தான் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக காசா மக்கள் ஒன்றிணைந்துள்ளனர். காசாவை விட்டு வெளியேற வேண்டும் என்று ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக பல ஆயிரம் பேர் தெருக்களில் ஊர்வலம் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியாக காசா உள்ளது.
இந்த காசாவில் ஹமாஸ் எனும் அமைப்பு செயல்பட்டு வருகிறது. காசா பகுதியை ஹமாஸ் அமைப்பு தான் கட்டுப்படுத்தி வருகிறது. இந்த அமைப்புக்கும், இஸ்ரேலுக்கும் இடையே இருந்த மோதல் தற்போது போராக மாறி உள்ளது. 2023ம் ஆண்டு அக்டோபரில் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் போரை தொடங்கியது. காசாவுக்குள் புகுந்து கடந்த ஜனவரி வரை 15 மாதங்களாக இஸ்ரேல் கடும் தாக்குதலை நடத்தியது. வான்வெளி தாக்குதலையும் மேற்கொண்டது. இதனால் காசாவில் சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கானவர்கள் படுகாயமடைந்துள்ளனர். Also Read "அங்க பாருங்க ஹமாஸ்..
மருத்துவமனை மீது குண்டு வீசிய இஸ்ரேல்! பொதுமக்கள் உயிரிழப்பு 50,000ஐ தாண்டியது" இதையடுத்து காசாவில் தற்காலிகமாக போர் நிறுத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த போர் நிறுத்தம் கடந்த ஜனவரி முதல் தொடர்ந்து வந்தது. இதற்கிடையே தான் தற்போது காசா மீது மீண்டும் இஸ்ரேல் தாக்குதலை தொடங்கி உள்ளது. காசாவிற்காக துருக்கி கட்டி கொடுத்த ஒரெயோரு புற்றுநோய் மருத்துவமனை குண்டுவீசி அழிக்கப்பட்டுள்ளது.
மேலும் தொடர்ந்து மக்கள் பலியாகி வருகின்றனர். இந்நிலையில் தான் காசாவில் வசிக்கும் மக்களில் ஒரு பகுதியினர் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக திரும்பி உள்ளனர். வடக்கு காசா பகுதியான பெய்ட் லகியாவில் திடீரென்று அவர்கள் தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்தினர். ஊர்வலமாக சென்றனர். அப்போது காசாவை விட்டு ஹமாஸ் அமைப்பினர் வெளியேற வேண்டும் என்று கோஷமிட்டனர். அதுமட்டுமின்றி ஹமாஸ் அமைப்புக்கு எதிரான பதாகைகளை அவர்கள் கையில் ஏந்தியிருந்தனர்.
"வந்தாச்சு நல்ல செய்தி.! "இது" மட்டும் நடந்தால் தங்கம் விலை பட்டுனு விழும்.. குறைய வாய்ப்பு அதிகமாம்! " Powered By தன் மகன்மீது அவருக்கு அவ்வுளவு அன்பு
இந்த போராட்டம் இன்னும் வலுவாகும் பட்சத்தில் அது ஹமாஸ் அமைப்புக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும். மக்கள் இரவு, பகல் என்று தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் காசாவின் அமைதியை மனதில் வைத்து அவர்கள் ஹமாஸ் அமைப்பினரை வெளியேற்றுகிறார்களா? என்ற பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் காசாவில் இப்படியான போராட்டம் நடப்பது ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்பும் சிலமுறை பொதுமக்கள் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போராட்டங்களை நடத்தினர்.
அதன்பிறகு ஹமாஸ் அமைப்பினரால் அவர்கள் ஒடுக்கப்பட்டனர். இப்படியான சூழலில் தற்போது காசாவில் மீண்டும் போராட்டம் என்பது வெடித்துள்ளது. இதுதொடர்பான போட்டோ மற்றும் வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் பொதுமக்கள், ‛‛அவுட் அவுட் ஹமாஸ்.. ஹமாஸ் அவுட்'' என்று கோஷமிடுகின்றனர். அதேபோல் ‛போரை நிறுத்தங்கள்.. சிறுவர் - சிறுமிகள் வாழ விரும்புகின்றனர்'' என்று கோஷங்களை எழுப்புவது வீடியோவில் பதிவாகி உள்ளது.