அமெரிக்காவின் புதிய தூதராக ரஷ்யா அதிரடி
07 Mar,2025
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. இதனால் ரஷ்யா - அமெரிக்கா இடையேயான உறவில் கடும் விரிசல் ஏற்பட்டது. தற்போது அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற நிலையில் ரஷ்யா - அமெரிக்கா இடையேயான உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவை தொடர்ந்து டிரம்ப் பாராட்டி வருகிறார். இருப்பினும் டிரம்பை நம்பாத புதின் அமெரிக்காவை கடுமையாக விமர்சனம் செய்யும் நபரை அமெரிக்காவின் புதிய ரஷ்ய தூதராக நியமித்துள்ளார்.
இந்த புதிய தூதர் யார்? அவர் என்னென்ன செய்தார்? என்பது பற்றி இங்கு பார்க்கலாம். உக்ரைன் மீது கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா போரை தொடங்கியது. இந்த போர் 3 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வருகிறது. ரஷ்யாவின் போர் நடவடிக்கை தொடங்கியபோது அமெரிக்காவின் அதிபராக இருந்தவர் ஜோ பைடன். இவர் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதுமட்டுமின்றி ரஷ்யாவை தனிமைப்படுத்த விரும்பினார். இதற்காக ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்தார். அமெரிக்காவை தொடர்ந்து நேட்டோவில் உள்ள ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது. இதனால் ரஷ்யாவுக்கும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையேயான உறவில் கடும் விரிசல் ஏற்பட்டது. அதுமட்டுமின்றி ரஷ்யாவின் போர் நடவடிக்கையை சமாளிக்க உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் அதிகளவில் உதவியை வழங்கின.
அதோடு அமெரிக்கா, ரஷ்யாவை கடுமையாக விமர்சனம் செய்து வந்தது. விளாடிமிர் புதினை கடுமையாக சாடியது. ஆனால் இப்போது நிலைமை முற்றிலுமாக மாறிவிட்டது. ரஷ்யாவின் பக்கம் அமெரிக்கா நெருங்கி செல்கிறது. உக்ரைனை கைவிட்டுள்ளது. இந்த மாற்றத்துக்கு முக்கிய காரணம் அமெரிக்காவில் நடந்த ஆட்சி மாற்றம் தான். கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். இவர் அதிபராக பொறுப்பேற்றது முதல் உக்ரைனை கடுமையாக விமர்சனம் செய்து வருவதோடு ரஷ்யாவை அரவணைக்க தொடங்கி
உள்ளார். Powered By SKIP ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் போர் நிறுத்தம் தொடர்பாக டிரம்ப் பேசினார். உக்ரைனுக்கான உதவியை டிரம்ப் நிறுத்தினார். முன்னதாக சவுதி அரேபியாவில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்தித்து பேசினார். அப்போது உக்ரைன் மீதான போர் நிறுத்தம் பற்றி விவாதிக்கப்பட்டது. அதோடு அமெரிக்கா - ரஷ்யா இடையேயான வர்த்தகம் மற்றும் இருநாடுகள் இடையேயான தூதரக உறவை வலுப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.
உக்ரைன் மீதான போர் நடவடிக்கையால் அமெரிக்காவில் உள்ள ரஷ்ய தூதரகங்களில் இருந்து அதிகாரிகள் வெளியேற்றப்பட்டனர். தற்போது மீண்டும் அமெரிக்காவில் இருக்கும் ரஷ்ய தூதரங்களில் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்படியான சூழலில் தான் அமெரிக்காவுக்கான புதிய தூதரை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நியமனம் செய்துள்ளார். அவரது பெயர் என்னவென்றால் அலெக்சாண்டர் டார்ச்சீவ். கடந்த வாரம் துருக்கி தலைநர் இஸ்தான்புல்லில் ரஷ்யா - அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இந்த வேளையில் அமெரிக்காவுக்கான ரஷ்யா தூதராக அலெக்சாண்டர்
டார்ச்சீவை நியமிக்க ரஷ்யா முடிவு செய்தது. இதற்கு அமெரிக்காவும் பச்சைக்கொடி காட்டியது. இதற்கிடையே தான் தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ரஷ்யாவுடன், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நெருக்கம் காட்டி வருகிறார். ஆனாலும் ரஷ்ய அதிபர் புதின், டிரம்பை நம்பவில்லை. இதனால் தான் அமெரிக்காவுக்கான ரஷ்ய தூதராக அலெக்சாண்டர் டார்ச்சீவை, புதின் நியமித்து உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த அக்டோபர் மாதம் தூதர் அனடோலி அன்டோனோவ் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு ரஷ்யா சார்பில் அமெரிக்காவுக்கு தூதர் நியமிக்கப்படாமல் இருந்தது. இப்போது புதிய தூதராக அலெக்சாண்டர் டார்ச்சீவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் யார் என்றால் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை கடுமையாக திட்டி தீர்த்தவர். ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் செயல்படுவதாக பொதுவெளியில் குற்றச்சாட்டுகளை முன்வைத்து கவனம் பெற்றார். இவருக்கு இப்போது 64 வயது ஆகிறது. இவர் இதற்கு முன்பு அமெரிக்காவின் ரஷ்யா தூதரகத்தில் நீண்டகாலம் பணியாற்றி உள்ளார். அமெரிக்கா மற்றும் அங்குள்ள அரசியல்வாதிகள் பற்றி நன்கு அறிந்தவர். அதேபோல் இதற்கு முன்பு அமெரிக்காவின் அண்டை நாடான கனடாவின் தூதராக 2014 முதல் 2021 வரை செயல்பட்டார். ரஷ்யாவை பொறுத்தவரை மூத்த தூதரக அதிகாரிகளில் இவரும் ஒருவர். அமெரிக்காவை கடுமையாக விமர்சித்த அலெக்சாண்டர் டார்ச்சீவை அந்த நாட்டின் ரஷ்ய தூதராக புதின் நியமித்துள்ளதன் மூலம் டிரம்பை அவர் நம்பவில்லை என்கின்றனர் சர்வதேச அரசியல் நோக்கர்கள்.