டிரம்ப் நிர்வாகம் அமெரிக்காவில் தங்கும் வெளிநாட்டினரைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சட்டவிரோதமாக தங்கள் நாட்டில் தங்குவோரை ராணுவ விமானம் மூலம் கூட நாடுகடத்தி வருகிறது. ஒரு பக்கம் டிரம்ப் அரசு இதுபோன்ற கடுமையான சட்டங்களைப் போட்டு வரும் நிலையில், மற்றொரு நாடு பணத்தை வாங்கிக்கொண்டு தனது குடியுரிமையையே விற்பனை செய்து வருகிறது. எதற்காக இதுபோல செய்கிறார்கள். இதன் பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம். அமெரிக்க அதிபரான டிரம்ப் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களால் தான் தங்கள் நாட்டின் பொருளாதாரமே பாதிக்கப்படுகிறது என்ற
ரேஞ்சில் பேசி வருகிறார். இதனால் வெளிநாட்டினர் அமெரிக்கா செல்வதே சவாலான ஒன்றாக மாறி வருகிறது. ரூ.91 லட்சம் கொடுத்தால் குடியுரிமை அதேநேரம் மறுபுறம் இங்கு ஒரு நாடு இந்திய மதிப்பில் வெறும் ரூ.91 லட்சம் கொடுத்தால் குடியுரிமையை வழங்குகிறது. ரூ. 91 லட்சம் அதிகமான தொகை போலத் தோன்றலாம். ஆனால், நாட்டின் குடியுரிமையே கிடைக்கும் என்பதால் ரூ.91 லட்சம் குறைவான தொகையாகவே இருக்கிறது. குடியுரிமையை இப்படித் தூக்கிக் கொடுக்கும் நாடு எது? எதற்காக இப்படிச் செய்கிறார்கள் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
89 நாடுகளுக்குப் போகலாம் பசிபிக் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடு நவ்ரு.. சுமார் 8 சதுர மைல் பரப்பளவு மட்டுமே கொண்ட இந்த நாடு தான் 1.05 லட்சம் டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.91.5 லட்சம் கொடுத்தால் குடியுரிமையை வழங்குகிறது. எது குடியுரிமையையே தருகிறார்களா.. அப்போ அது பின்தங்கிய நாடாகத் தான் இருக்கும்.. அந்த பாஸ்போர்ட்டை வைத்து என்ன செய்ய முடியும் என நினைக்க வேண்டாம். நவ்ரு நாட்டின் பாஸ்போர்ட்டை வைத்து அயர்லாந்து, ஹாங்காங், ஐக்கிய அமீரகம், அவ்வளவு ஏன் பிரிட்டன் உள்ளிட்ட 89 நாடுகளுக்கு விசா இல்லாமல் போய் வரலாம்.
என்ன காரணம்? ஆஸ்திரேலியாவின் வடகிழக்கில் உள்ள மைக்ரோனே என்ற பகுதியில் அமைந்துள்ள இந்த சிறிய தீவு நாடு, காலநிலை மாற்றத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடல் நீர்மட்டம் உயர்வு, கடலோர அரிப்பு மற்றும் உயரமான புயல் அலைகள் போன்ற அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது. இதை எதிர்கொள்ளவே இதுபோல கோல்டன் பாஸ்போர்ட் திட்டத்தை அறிவித்துள்ளது. குடியுரிமையை விற்பனை செய்வது என்பது நவ்ரு போன்ற சிறிய நாடுகளுக்குப் பொருளாதார ரீதியாக மிகப் பெரியளவில் உதவியாக இருக்கிறதாம். அதாவது இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையே வெறும் 12,500 தான். காலநிலை மாற்றத்தால் நவ்ரு கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் தனது மக்களை உயரமான இடத்தில் குடியேற வைக்கும் அங்கு புதிய வாழ்விடத்தை உருவாக்கவும் நப்ரு அரசு முடிவு செய்துள்ளது. இருப்பினும், இதற்கு சுமார் ரூ.545 கோடி செலவாகும். இதற்காகவே குடியுரிமையை விற்கும் திட்டத்தை அறிவித்துள்ளனர்.
டார்கெட் இதுதான் கடந்தாண்டு இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில், இதற்கான விண்ணப்பங்கள் வரத் தொடங்கிவிட்டதாம். இந்த ஆண்டு மட்டும் 66 விண்ணப்பங்களைப் பெற நவ்ரு இலக்கு வைத்துள்ளது. மொத்தத்தில் 500 விண்ணப்பங்களைப் பெற அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் தங்களின் லட்சிய திட்டத்திற்குத் தேவையான நிதியைச் சேகரிக்க முடியும் என நவ்ரு அரசு நம்புகிறது. நவ்ரு கோல்டன் பாஸ்போர்ட் அதேநேரம் இதுபோன்ற கோல்டன் பாஸ்போர்ட் திட்டத்தை நவ்ரு கொண்டு வருவது இது முதல்முறை இல்லை.
கடந்த 2003ம் ஆண்டிலேயே இதுபோன்ற திட்டத்தை அறிவித்தனர். அப்போது நவ்ரு குடியுரிமை பெற்ற இரண்டு அல்-கொய்தா தீவிரவாதிகள் மலேசியாவில் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து அப்போது கோல்டன் பாஸ்போர்ட் திட்டம் ரத்து செய்யப்பட்டது. மீண்டும் இதுபோல நடக்காமல் இருக்க இந்த முறை கடுமையான பேக் கிரவுண்ட் செக் நடத்தப்படும் என்றும் அதில் தேர்ச்சி பெறுவோருக்கு மட்டுமே கோல்டன் பாஸ்போர்ட் வழங்கப்படும் என நவ்ரு அறிவித்துள்ளது. நவ்ரு என்பது பாஸ்பேட் என்ற கெமிக்கல் அதிகம் உள்ள தீவாகும். 1900களின் முற்பகுதியில் இருந்து பாஸ்பேட் வெட்டி எடுக்கப்பட்டது. இதனால் பெரும்பாலான நிலங்கள் பாழடைந்து, வாழத் தகுதியற்றதாக உள்ளன. இதனால் நவ்ரு தீவின் 80 சதவீத பகுதி மக்கள் கடல் பகுதியில் வாழ வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்தச் சூழலில் கடல் நீர்மட்டம் உயரத் தொடங்கியிருப்பதே பிரச்சினையாக வெடித்துள்ளது
கனடா எடுத்த அஸ்திரம்.. அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிராக ஆவேசம்
கனடாவின் டொரண்டோ நகரில் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வரி விதிப்பு விவகாரத்தில் டிரம்பை கடுமையாக குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில், அன்று அமெரிக்கா, அவர்களின் நெருங்கிய தோழமை நாடான கனடாவுக்கு எதிராக ஒரு வர்த்தகப் போரை தொடங்கி உள்ளது என்று குற்றம்சாட்டினார். இதனிடையே வரி விதிப்பு விவகாரத்தில் உலக வர்த்தக அமைப்பில் அமெரிக்கா மீது கனடா புகார் அளித்திருக்கிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப், கனடா, மெக்சிகோ, சீனா,இந்தியா,
பிரேசில் உள்பட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரிகளை விதித்துள்ளார். வரி விதிப்புக்கு அவர் கூறும் காரணம் என்னவென்றால், எங்கள் நாட்டு பொருட்களுக்கு மட்டும் கடுமையான வரி விதிப்புகளை மேற்கண்ட நாடுகள் கையாள்வதாகவும், எனவே அந்த நாடுகளுக்கு அவர் பாணியிலேயே பதில் அளிக்கும் வகையில் அதிக வரி விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்பின் அறிவிப்பால் கனடா, மெக்சிகோ, சீனா,இந்தியா, பிரேசில் உள்பட பல்வேறு உலக நாடுகள் பாதிக்கப்பட போகின்றன. இதன் மூலம் அவர் வர்த்தக போர் உலக நாடுகள் மீது பாய்ந்துள்ளது.இந்த வரி யுத்தம் விவகாரத்தில் சீனா, அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்க தயாராகி வருகிறது. எந்த போருக்கும் தாங்கள் தயார் என்று சீனா பகிரங்கமாக அமெரிக்காவிற்கு சவால் விடுத்துள்ளது. அமெரிக்காவின் பக்கத்து நாடுகளாக கனடா, மெக்சிசோ போன்ற நாடுகளில், யானையின் காலடியில் சிக்கிய சிறிய உயிர்களாக ஆபத்தில் சிக்கி தவிக்கின்றன. இந்த விவகாரத்தில் இந்தியாவிற்கும் பெரிய பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
வரும் ஏப்ரல் 2ம் தேதி முதல் இந்தியாவிற்கு வரிவிதிப்பு அதிகமாக இருக்கும் என்று நேரடியாகவே எச்சரித்துள்ளார் டிரம்ப். முட்டாள்கள் தினத்திற்கு மறுநாள் இதை செய்வேன் என்று கொக்கரித்து வருகிறார் டிரம்ப். Powered By SKIP இதன்படி வடஅமெரிக்க நாடுகளான கனடா மற்றும் மெக்சிகோவில் இறக்குமதி ஆகும் பொருட்கள் மீது 25 சதவீத வரியையும், சீனாவில் இருந்து வரும் பொருட்களுக்கு 20 சதவீத வரியையும் டிரம்ப் அறிவித்திருக்கிறார். இந்த நாடுகளுக்கான புதிய வரி நேற்று முன்தினம் அமலுக்கு வந்தது. அதை தொடர்ந்து டிரம்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக, அமெரிக்க பொருட்கள் மீது கனடா 25 சதவீத வரி விதிக்கும் என்று அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்திருக்கிறார். அதே போல சீனாவும் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி ஆகும் பொருட்கள் மீது கூடுதலாக 15 சதவீதம் வரை வரி விதிப்பதாக அறிவித்திருக்கிறது.
இந்த நிலையில் கனடாவின் டொராண்டோ நகரில் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வரி வதிப்பு விவகாரத்தில் டிரம்பை கடுமையாக குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில், அன்று அமெரிக்கா, அவர்களின் நெருங்கிய தோழமை நாடான கனடாவுக்கு எதிராக ஒரு வர்த்தகப் போரை தொடங்கி உள்ளது. அதே நேரத்தில் அவர்கள் ரஷியாவுடன் பாசிட்டிவாக பணியாற்றுவது பற்றிப் பேசுகிறார்கள். பொய் சொல்லும், கொலைகார சர்வாதிகாரியான புதினை சமாதானப்படுத்த முயற்சிக்கிறார்கள். கனடா பொருளாதாரத்தின் முழுமையான சரிவை காண அவர் (டிரம்ப்) விரும்புகிறார். அப்படி செய்தால் தான், கனடா, அமெரிக்காவின் ஒரு மாகாணமாக எளிதாக இணையும் என்று அவர் (டிரம்ப்) நினைக்கிறார்.
ஆனால் அவர் நினைப்பது போல் அமெரிக்கா உடன் கனடா ஒருபோதும் இணையாது.. அப்படி ஒருபோதும் நடக்கப்போவதில்லை. நாங்கள் ஒருபோதும் அமெரிக்காவின் 51-வது மாகாணமாக இருக்க விரும்ப மாட்டோம். டிரம்ப், நீங்கள் மிகவும் புத்திசாலியாக இருந்தாலும், இது (வரி விதிப்பு) மிகவும் முட்டாள்தனமான செயல் என்பதை உங்களுக்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்" என்று ஜஸ்டின் ட்ரூடோ பேசினார். இதனிடையே வரி விதிப்பு விவகாரத்தில் உலக வர்த்தக அமைப்பில் அமெரிக்கா மீது கனடா புகார் அளித்திருக்கிறது. இது குறித்து உலக வர்த்தக அமைப்பின் கனடா தூதர் நாடியா தியோடர், "கனடா மீது அமெரிக்கா நியாயமற்ற வரி விதிப்பை அறிவித்திருக்கிறது. இந்த விவகாரத்தில் உலக வர்த்தக மையத்தை நாடுவதை தவிர எங்களுக்கு வேறு வழியே இல்லை.. எனவே கனடா பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்தது தொடர்பாக அமெரிக்கா மீது உலக வர்த்தக மையத்தில் புகார் அளித்திருக்கிறது. கனடா புகார் அளித்ததை உலக வர்த்தக அமைப்பு உறுதி செய்திருக்கிறது.