கனடாவின் டொரண்டோ நகரில் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வரி விதிப்பு விவகாரத்தில் டிரம்பை கடுமையாக குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில், அன்று அமெரிக்கா, அவர்களின் நெருங்கிய தோழமை நாடான கனடாவுக்கு எதிராக ஒரு வர்த்தகப் போரை தொடங்கி உள்ளது என்று குற்றம்சாட்டினார். இதனிடையே வரி விதிப்பு விவகாரத்தில் உலக வர்த்தக அமைப்பில் அமெரிக்கா மீது கனடா புகார் அளித்திருக்கிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப், கனடா, மெக்சிகோ, சீனா,இந்தியா,
பிரேசில் உள்பட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரிகளை விதித்துள்ளார். வரி விதிப்புக்கு அவர் கூறும் காரணம் என்னவென்றால், எங்கள் நாட்டு பொருட்களுக்கு மட்டும் கடுமையான வரி விதிப்புகளை மேற்கண்ட நாடுகள் கையாள்வதாகவும், எனவே அந்த நாடுகளுக்கு அவர் பாணியிலேயே பதில் அளிக்கும் வகையில் அதிக வரி விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்பின் அறிவிப்பால் கனடா, மெக்சிகோ, சீனா,இந்தியா, பிரேசில் உள்பட பல்வேறு உலக நாடுகள் பாதிக்கப்பட போகின்றன. இதன் மூலம் அவர் வர்த்தக போர் உலக நாடுகள் மீது பாய்ந்துள்ளது.இந்த வரி யுத்தம் விவகாரத்தில் சீனா, அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்க தயாராகி வருகிறது. எந்த போருக்கும் தாங்கள் தயார் என்று சீனா பகிரங்கமாக அமெரிக்காவிற்கு சவால் விடுத்துள்ளது. அமெரிக்காவின் பக்கத்து நாடுகளாக கனடா, மெக்சிசோ போன்ற நாடுகளில், யானையின் காலடியில் சிக்கிய சிறிய உயிர்களாக ஆபத்தில் சிக்கி தவிக்கின்றன. இந்த விவகாரத்தில் இந்தியாவிற்கும் பெரிய பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
வரும் ஏப்ரல் 2ம் தேதி முதல் இந்தியாவிற்கு வரிவிதிப்பு அதிகமாக இருக்கும் என்று நேரடியாகவே எச்சரித்துள்ளார் டிரம்ப். முட்டாள்கள் தினத்திற்கு மறுநாள் இதை செய்வேன் என்று கொக்கரித்து வருகிறார் டிரம்ப். Powered By SKIP இதன்படி வடஅமெரிக்க நாடுகளான கனடா மற்றும் மெக்சிகோவில் இறக்குமதி ஆகும் பொருட்கள் மீது 25 சதவீத வரியையும், சீனாவில் இருந்து வரும் பொருட்களுக்கு 20 சதவீத வரியையும் டிரம்ப் அறிவித்திருக்கிறார். இந்த நாடுகளுக்கான புதிய வரி நேற்று முன்தினம் அமலுக்கு வந்தது. அதை தொடர்ந்து டிரம்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக, அமெரிக்க பொருட்கள் மீது கனடா 25 சதவீத வரி விதிக்கும் என்று அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்திருக்கிறார். அதே போல சீனாவும் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி ஆகும் பொருட்கள் மீது கூடுதலாக 15 சதவீதம் வரை வரி விதிப்பதாக அறிவித்திருக்கிறது.
இந்த நிலையில் கனடாவின் டொராண்டோ நகரில் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வரி வதிப்பு விவகாரத்தில் டிரம்பை கடுமையாக குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில், அன்று அமெரிக்கா, அவர்களின் நெருங்கிய தோழமை நாடான கனடாவுக்கு எதிராக ஒரு வர்த்தகப் போரை தொடங்கி உள்ளது. அதே நேரத்தில் அவர்கள் ரஷியாவுடன் பாசிட்டிவாக பணியாற்றுவது பற்றிப் பேசுகிறார்கள். பொய் சொல்லும், கொலைகார சர்வாதிகாரியான புதினை சமாதானப்படுத்த முயற்சிக்கிறார்கள். கனடா பொருளாதாரத்தின் முழுமையான சரிவை காண அவர் (டிரம்ப்) விரும்புகிறார். அப்படி செய்தால் தான், கனடா, அமெரிக்காவின் ஒரு மாகாணமாக எளிதாக இணையும் என்று அவர் (டிரம்ப்) நினைக்கிறார்.
ஆனால் அவர் நினைப்பது போல் அமெரிக்கா உடன் கனடா ஒருபோதும் இணையாது.. அப்படி ஒருபோதும் நடக்கப்போவதில்லை. நாங்கள் ஒருபோதும் அமெரிக்காவின் 51-வது மாகாணமாக இருக்க விரும்ப மாட்டோம். டிரம்ப், நீங்கள் மிகவும் புத்திசாலியாக இருந்தாலும், இது (வரி விதிப்பு) மிகவும் முட்டாள்தனமான செயல் என்பதை உங்களுக்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்" என்று ஜஸ்டின் ட்ரூடோ பேசினார். இதனிடையே வரி விதிப்பு விவகாரத்தில் உலக வர்த்தக அமைப்பில் அமெரிக்கா மீது கனடா புகார் அளித்திருக்கிறது. இது குறித்து உலக வர்த்தக அமைப்பின் கனடா தூதர் நாடியா தியோடர், "கனடா மீது அமெரிக்கா நியாயமற்ற வரி விதிப்பை அறிவித்திருக்கிறது. இந்த விவகாரத்தில் உலக வர்த்தக மையத்தை நாடுவதை தவிர எங்களுக்கு வேறு வழியே இல்லை.. எனவே கனடா பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்தது தொடர்பாக அமெரிக்கா மீது உலக வர்த்தக மையத்தில் புகார் அளித்திருக்கிறது. கனடா புகார் அளித்ததை உலக வர்த்தக அமைப்பு உறுதி செய்திருக்கிறது.