உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை அவமானப்படுத்தி வெள்ளை மாளிகையில் இருந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியேற்றினார். இதற்கிடையே தான் உக்ரைனுக்கு ஆதரவாக கனடா அதிபர் ஜஸ்டீன் ட்ரூடோ கருத்து தெரிவித்து டொனால்ட் டிரம்பை டென்ஷனாக்கி உள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நடவடிக்கை எடுத்து வருகிறார். ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதினுடன் அவர் தொலைபேசியில் பேசினார். அதன்பிறகு ரஷ்யா, அமெரிக்கா பிரதிநிதிகள் சவுதி அரேபியாவில் வைத்து போர் நிறுத்தம் தொடர்பாக பேசினர். இதில் உக்ரைன் புறக்கணிப்பட்டது.
ரஷ்யாவின் போரால் பாதிக்கப்பட்ட எங்களையே அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என்று வருத்தம் தெரிவித்தார் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி. அதேபோல் அமெரிக்கா, ரஷ்யாவின் பக்கம் சாய்ந்து விட்டதை அவர் உணர்ந்தார். இதனால் உக்ரைன் இல்லாமல் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டால் அதனை ஏற்கமாட்டோம் என்று கூறினார். இந்நிலையில் தான் டிரம்ப் அழைப்பை ஏற்று உக்ரைன் அதிபர் விளாடிமிர் புதின் அமெரிக்கா சென்றார். வெள்ளை மாளிகையில் டிரம்ப் மற்றும் ஜெலன்ஸ்கி ஆகியோர் பேசினர். மேலும் உக்ரைனுக்கு 350 பில்லியன் டாலர் அளவுக்கு அமெரிக்கா உதவி செய்தது. அதனை திரும்ப பெறும் வகையில் அரியவகை கனிமங்களில் பங்கு கேட்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் வகையில் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் இந்த பேச்சுவார்த்தை சக்சஸ் ஆகவில்லை. மாறாக அமெரிக்கா மற்றும் உக்ரைன் இடையேயான பேச்சுவார்த்தை கடும் மோதலுடன் முடிவுக்கு வந்தது.
உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் அவரது குழுவினர் பாதியில் வெளியேறினர். ஒப்பந்தத்துக்கு ஓகே சொன்னால் மட்டுமே வெள்ளை மாளிகைக்கு மீண்டும் வாருங்கள் என்று கூறி டிரம்ப் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் அவரது குழுவை வெள்ளை மாளிகையில் இருந்து வெளியே அனுப்பினார். இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணம் அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் - ஜெலன்ஸ்கி இடையேயான கருத்து மோதல் தான். அதாவது டொனால்ட் டிரம்புடன், விளாடிமிர் ஜெலன்ஸ்கி அமர்ந்து இருந்தார். அப்போது டொனால்ட் டிரம்ப் பக்கம் இருந்த அமெரிக்காவின் துணை அதிபர் ஜேடி வான்ஸ், ‛‛அமெரிக்க டிப்ளமேசி ரீதியாக நடவடிக்கை எடுத்து வருகிறது. போர் நிறுத்துவது தொடர்பாக ரஷ்யாவுடன் பேசி உள்ளது. ஆனால் உங்களின் செயல்பாடு உக்ரைனை அழிவுப்பாதைக்கு எடுத்து செல்லும் வகையில் உள்ளது'' என்று கூறினார்.
இதற்கு ஜெலன்ஸ்கி, ‛‛ "ரஷ்யா செய்வதை நீங்கள் தடுக்கவே இல்லை. 2014ல் ரஷ்யா எங்களின் நிலத்தை ஆக்கிரமித்தது. அப்போது இருந்த பராக் ஒபாமா, அதன்பிறகு டொனால்ட் டிரம்ப், ஜோ பைடன் ஆகியோர் எதையும் செய்யவில்லை. அப்படியான சூழலில் எதை சொல்கிறீர்கள்'' என்று கூறினார். இதை கேட்ட ஜேடி வான்ஸ், ‛‛அமெரிக்காவை பத்திரிகையாளர் முன்பு அவமானப்படுத்துகிறார். மிஸ்டர் பிரசிடென்ட்'' என்று கூறினார். இதையடுத்து டிரம்ப் குறுக்கிட்டு, ‛‛உக்ரைன் இப்போது நல்ல நிலையில் இல்லை. மோசமான சூழலில் நீங்கள் இருக்கிறீர்கள். இதற்கு நீங்கள் தான் காரணம். பல கோடி மக்களின் உயிரோடு விளையாடிக்கொண்டு இருக்கிறீர்கள்" என்றார். இதற்கு பதில் கூறிய ஜெலன்ஸ்கி, ‛‛இப்படி சத்தமாக மீடியா முன்பு போர் பற்றி பேசுவது சரியா? என்று யோசித்து பார்க்க வேண்டும். போரை நாங்கள் தனியாக எதிர்கொண்டு வருகிறோம். நாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம்" என்றார்.
இதற்கு டிரம்ப், ‛ "நீங்கள் தனியாக இல்லை.. அமெரிக்கா உங்களுக்கு உதவியிருக்கிறது. தனியாக இருந்தால் உக்ரைன் என்ற நாடே இருந்திருக்காது. உங்களுக்கு 350 பில்லியன் டாலர் எங்கள் முன்னாள் பிரதமர் தந்திருக்கிறார்கள் என்பதையும் மறந்துவிட வேண்டாம். நாங்கள் இருப்பதால் தான் உங்கள் நாடு இருக்கிறது. 3ஆம் உலகப்போரை வைத்து விளையாட வேண்டாம். சமரசம் பேச நினைத்தால் மட்டும் அடுத்த முறை இங்கு வாருங்கள்'' என்று கூறி வெளியே போகும்படி கூறினார். இதையடுத்து உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் அவரது குழுவினர் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறினர்.
ந்நிலையில் தான் மோதலுக்கு நடுவே கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுபற்றி ஜஸ்டின் ட்ரூடோ தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛ ரஷ்யா சட்டவிரோதமாகவும், நியாயமற்ற முறையிலும் உக்ரைனை ஆக்கிரமித்துள்ளது. 3 ஆண்டுகளாக தைரியத்துடன் உக்ரைன் போராடி வருகிறது. ஜனநாயகம், சுதந்திரம், இறையாண்மைக்கான அவர்களின் போராட்டம் என்பது நம் அனைவருக்கும் முக்கியமான ஒன்றாகும். நியாயமான அதேவேளையில் நீடித்த அமைதியை உருவாக்க கனடா எப்போதும் உக்ரைன் மற்றும் உக்ரைன் மக்களுடன் நிற்கும்'' என்று கூறியுள்ளார்
ஸ்டின் ட்ரூடோவின் இந்த பதிவுக்கு உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் ஜஸ்டின் ட்ரூடோவின் எக்ஸ் பக்க பதிவை சுட்டிக்காட்டி ‛‛Thank you for your support'' என்று கூறியுள்ளார். ஏற்கனவே கனடாவுக்கும், அமெரிக்காவுக்கும் பஞ்சாயத்து உள்ளது. கனடாவை அமெரிக்காவின் 51வது மாகாணமாக்க டிரம்ப் விரும்புகிறார். அதேபோல் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கனடாவுக்கு 25 சதவீத வரியை விதித்தார். அதன்பிறகு அதனை நிறுத்தி வைத்தார். வரும் 4ம் தேதி முதல் மீண்டும் அந்த வரி விதிப்பு அமலாக உள்ளது. இதனை கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ கண்டித்துள்ளார். இந்த பஞ்சாயத்துக்கு நடுவே தான் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிப்பதாக ஜஸ்டீன் ட்ரூடோ கூறியுள்ளார். இதன்மூலம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை அவர் சீண்டி உள்ளார்.