அமெரிக்காவுக்கு அழைப்பு புதின்.... சர்வதேச அரசியல் மாறுதே
26 Feb,2025
உக்ரைன் ரஷ்யா இடையேயான மோதலை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா முயன்று வரும் நிலையில், இப்போது சத்தமே இல்லாமல் யாரும் எதிர்பார்க்காத மாற்றம் நடந்துள்ளது. அமெரிக்கா உடன் எப்போதும் மோதல் போக்கையே கொண்டிருக்கும் ரஷ்யா, இப்போது திடீரென அமெரிக்க நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா உக்ரைன் போர் கடந்த 3 ஆண்டுகளாகத் தொடர்ந்து வருவது அனைவருக்கும் தெரியும். இதனால் இந்த இரு நாடுகள் மட்டுமின்றி, சர்வதேச அளவிலும் கூட பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உக்ரைன் மோதல் இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போரை நிறுத்த பல்வேறு உலக உலக நாடுகளும் முயன்றன. இருப்பினும், முதலில் இதில் எந்தவொரு பலனும் கிடைக்கவில்லை. ஆனால், டிரம்ப் வந்த பிறகு நிலைமை மாற தொடங்கியுள்ளது.
போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தை தீவிரமடைந்து வருகிறது. அதேநேரம் இப்போது அமெரிக்காவுக்கு ரஷ்யா வெளிப்படையாகவே அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து நாம் பார்க்கலாம். கடந்த செப்டம்பர் மாதம் அதிபர் தேர்தலுக்கு முன்பே உக்ரைன் தரப்பு டிரம்பிடம் ஒரு டீலை முன்மொழிந்தது. அதாவது உக்ரைனுக்கு அமெரிக்கா பாதுகாப்பு அளித்தால் உக்ரைனின் இயற்கை வளங்களில் இருந்து கிடைக்கும் ஒரு பகுதியைத் தருவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி முன்மொழிந்திருந்தார். அதாவது அமெரிக்காவுக்கு உக்ரைன் நிதி தரும்.. அதற்குப் பதிலாக உக்ரைனுக்கு அமெரிக்கா பாதுகாப்பு அளிக்க வேண்டும். இதுதான் டீல்.
அதிர்ச்சி கொடுத்த அமெரிக்கா ஆனால், கடந்த வாரம் அமெரிக்க அதிகாரிகள் இத்திட்டம் குறித்து மீண்டும் பேசிய போது உக்ரைனுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால் உக்ரைனின் இயற்கை வளங்களில் இருந்து கிடைக்கும் வருவாயில் சுமார் 50% தனக்கு வேண்டும் என அமெரிக்கா கேட்டது. மேலும், பாதுகாப்பு தருவோம் என்று உறுதியும் அளிக்க முடியாது என அமெரிக்கா சொல்லிவிட்டது.
பாதுகாப்பு உத்தரவாதம் இல்லாமல் ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட முடியாது என்பதில் ஜெலன்ஸ்கி உறுதியாக இருந்தார். இதில் நேரடியாகவே அமெரிக்காவை விமர்சித்தும் அவர் பேசினார். தொடர்ந்து இரு தரப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்த நிலையில், இப்போது ஒரு மாதிரி சமரசம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இறுதியாகும் உக்ரைன் டீல் இப்போதும் கூட அமெரிக்காவின் ஒப்பந்தம் உக்ரைனுக்கு ஆயுதம் அல்லது அமெரிக்க வீரர்களை அனுப்ப உறுதி தரவில்லை. இருந்தாலும் மற்ற அம்சங்களில் அது முந்தைய ஒப்பந்தத்தை விட உக்ரைனுக்குச் சாதகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது இதனால் உக்ரைனை அமெரிக்கா ஒப்புக்கொள்ளும் என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். மேலும்,
ஜெலன்ஸ்கி இந்த வாரம் அல்லது அடுத்த வாரம் அமெரிக்காவுக்கு வருவார் என்றும் இரு தரப்பிற்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் டிரம்ப் தரப்பு கூறியது. எதிர்பார்க்காத ட்விஸ்ட் இந்தச் சூழலில் தான் இப்போது யாரும் எதிர்பார்க்காத ஒரு ட்விஸ்ட் நடந்துள்ளது. அதாவது ரஷ்ய அதிபர் புதினும் அமெரிக்காவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதாவது அமெரிக்க நிறுவனங்கள் ரஷ்யாவுடன் பிஸ்னஸ் டீல்களை செய்யலாம் என்றும் இதன் மூலம் அமெரிக்க நிறுவனங்களுக்கு லாபம் கிடைக்கும் என்றும் டிரம்பிற்கு அழைப்பு விடுப்பது போல புதின் பேசியுள்ளார்.
இது தொடர்பாக புதின் மேலும் கூறுகையில், "அமெரிக்க நிறுவனங்கள் நல்ல டீல்களை எங்களுடன் போட்டுக் கொள்ளலாம். ரஷ்யா வசம் இருக்கும் உக்ரைன் பகுதிகளில் உள்ள இயற்கை வளங்களை எடுக்கவும் கூட அமெரிக்கா எங்களுக்கு உதவலாம். மேலும், உக்ரைனை விட பல அரிய கனிமங்கள் ரஷ்யாவில் புதைந்து இருக்கிறது. அதை வெட்டி எடுக்க நாங்கள் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுடன் இணைந்து பணியாற்றத் தயாராகவே உள்ளோம்" என்று அவர் கூறியுள்ளார்.
மாறும் சர்வதேச அரசியல்
அமெரிக்காவுக்கும் ரஷ்யாக்கும் எப்போதும் மோதல் போக்கே இருக்கும். ஆனால், டிரம்ப் அதிபரான பிறகு அவர் ரஷ்யாவுடன் இணக்கம் காட்டுவதைப் போலவே தெரிகிறது. சீனாவை எதிர்த்துவிட்டு டிரம்ப் ரஷ்யாவுக்கு ஆதரவாக இருப்பது போலத் தெரிகிறது. இந்தச் சூழலில் ரஷ்ய அதிபர் புதின் ஓபனாகவே இதுபோல அழைத்துள்ளது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.