இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. அதிகாலையில்
26 Feb,2025
இந்தோனேசியாவில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. இதனால் வீடுகள் குலுங்கின. அதிகாலை நேரம் என்பதால் தூக்கத்தில் இருந்த மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்று இந்தோனேசியா. ஆயிரக்கணக்காகன தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய இந்த நாடு, நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் ரிங்க் ஆப் பயர் எனப்படும் இடத்தில் பூகோள ரீதியில் அமைந்துள்ளது. இதனால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. எனினும் அவ்வப்போது சில கடுமையான நிலநடுக்கங்கள் ஏற்பட்டு மக்களை பீதி அடைய வைத்து விடுகிறது.
" மீண்டும் வேலையை காட்டும் சீனா.. மாலத்தீவை வைத்து இந்தியாவுக்கு போடும் ஸ்கெட்ச்! " அந்த வகையில் இன்று அதிகாலை இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.2 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி காலை 6.55 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. நேற்று அதிகாலை வங்க கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கொல்கத்தாவிலும் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகின. வங்க கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் 5.1 ஆக பதிவானது. அடுத்தடுத்து ஏற்பட்டுள்ள நிலநடுக்கங்கள் ஏதேனும் பெரிய நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கான அறிகுறியாக இருக்குமோ என்ற அச்சமும் எழாமல் இல்லை. இந்தோனேசியாவில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சுலவேசி தீவுகளில் 6.2 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்க்த்தால் அங்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. 100 பேர் பலியான நிலையில் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர்.
"ஐரோப்பாவின் பவர்ஹவுஸ்.. ஜெர்மனி அதிபராகும் வலதுசாரி தலைவர் மெர்ஸ்.. யார் இவர்? பின்னணி " 2018 ஆம் ஆண்டு பாலு தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2,200 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதேபோல, 2004 ஆம் ஆண்டு ரிக்டர் அலவில் 9.1 என மிக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் சுனாமியும் ஏற்பட்டது.1,70,000 பேர் இந்த நிலநடுக்கத்தால் பலியாகினர்.