ஐரோப்பா அமெரிக்காவிடமிருந்து சுதந்திரம் பெறவேண்டும் - ஜேர்மனியின் புதிய சான்சிலர் 
                  
                     25 Feb,2025
                  
                  
                     
					  
                     
						
	 
	 
	ஜேர்மனியின் புதிய சான்சிலராக தெரிவு செய்யப்பட்டுள்ள பிரீடிரிச் மேர்ஸ்  அமெரிக்காவிடமிருந்துசுதந்திரம் பெறவேண்டும் என  தெரிவித்துள்ளார்.
	 
	அமெரிக்கா ஐரோப்பிய கண்டத்தின் தலைவிதி குறித்து பெருமளவிற்கு அலட்சியமாக உள்ளது என தெரிவித்துள்ள ஜேர்மனியின் கென்சவேர்ட்டிவ் கட்சியின் தலைவர்  ஐரோப்பா சுதந்திரமாகவேண்டும் என தெரிவித்துள்ளார்.
	 
	ஜேர்மனியின் தேர்தலில் அமெரிக்காவின் தலையீட்டையும் அவர் கண்டித்துள்ளார்.
	 
	 
	 
	டிரம்ப் நிர்வாகமும் எலொன் மஸ்க்கும் ஜேர்மனியின் அதிதீவிர வலதுசாரிகளிற்கு ஆதரவளித்தமை குறிப்பிடத்தக்கது.
	 
	ஐரோப்பாவை வலுப்படுத்துவதே எனது மிகவும் முன்னுரிமைக்குரிய விடயம் எனதெரிவித்துள்ளஅவர் இதனை கூடியவிரைவில் செய்யவேண்டும், அமெரிக்காவிடமிருந்து படிப்படியாக நாங்கள் சுதந்திரத்தை பெறலாம் என குறிப்பிட்டுள்ளார்.
	 
	நான் இப்படி ஒரு கருத்தை தொலைக்காட்சிகளிற்கு தெரிவிக்கவேண்டிய நிலைவரும்,என ஒருபோதும் நினைக்கவில்லை  என தெரிவித்துள்ள மேர்ஸ் கடந்த வாரம் டொனால்ட் டிரம்ப் தெரிவித்த கருத்துக்கள் அமெரிக்கா அல்லது அதன் தற்போதைய நிர்வாகம்,ஐரோப்பாவின் தலைவிதி குறித்து அலட்சியமாக உள்ளதை வெளிப்படுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
	 
	ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தேர்தலில் பிரீடிரிச் மேர்ஸின் கென்சவேர்ட்டிவ் கட்சி வெற்றிபெற்றுள்ளது. அதேவேளை தீவிரவலதுசாரி கட்சியான ஏஎவ்டி ( அல்டனேர்ட் ஜேர்மன் கட்சி) 20.8 வீதவாக்குகள் கிடைத்தள்ளன.
	 
	பழையபாணி கென்சவேர்ட்டிவும்  . இதுவரை  அரசபதவிகளை வகிக்காதவருமான மேர்ஸ்; ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரத்திற்கும் அதிக சனத்தொகை கொண்ட நாட்டிற்கும் தலைமைதாங்கவுள்ளார்.