உக்ரைன் மீது ரஷ்யா போரை நடத்துவதற்கு முக்கிய காரணமே நேட்டோதான். இந்நிலையில், தான் அதிபர் பதவியிலிருந்து விலக வேண்டும் எனில், உக்ரைன் நேட்டோவில இணைய வேண்டும் என்று ஜெலன்ஸ்கி வலியுறுத்த தொடங்கியுள்ளார்.
ஜெலன்ஸ்கிக்கு உக்ரைன் மக்கள் மத்தியில் செல்வாக்கு போய்விட்டது. தேர்தலை நடத்த தயாராக இல்லை. எனவேதான் போரை காரணம் காட்டி தப்பித்து வருகிறார் என்று டிரம்ப் காட்டமாக விமர்சித்திருந்தார்.
Zelenskyy Ukraine NATO
போருக்கு நேட்டோதான் காரணம் என்று சொல்லப்படும் நிலையில், நேட்டோ என்றால் என்ன? அதை ஏன் ரஷ்யா எதிர்க்கிறது? உள்ளிட்ட விஷயங்களை தெரிந்துக்கொள்வது முக்கியமாகும். அதற்கு முன்னர் ஜெலன்ஸ்கி பேசியதை பார்த்து விடுவோம்.
"உக்ரைனில் அமைதி ஏற்பட வேண்டும் என்றும், நான் பதவியை விட்டு விலக வேண்டும் என்றும் நீங்கள் விரும்பினால் அதற்கு நான் தயாராகவே இருக்கிறேன். நேட்டோவில் உக்ரைன் இணைந்தால் நான் உடனடியாக ராஜினாமா செய்கிறேன். எங்கள் நிலைப்பாட்டை புரிந்துக்கொண்டு, ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிராக அமெரிக்கா எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். அமெரிக்கா எங்களுக்கு நட்பு நாடாக இருக்க வேண்டும். ரஷ்யாவுக்கு அல்ல" என்று கூறியுள்ளார்.
சோவியத் ரஷ்யா காலத்தில் அந்நாட்டுக்கு எதிராக உருவாக்கப்பட்டதுதான் நேட்டோ. அமெரிக்காவின் தலைமையின் கீழ் ஐரோப்பிய நாடுகள் இணைத்துக் கொண்டு ஒரு பெரும் படையாக நேட்டோ உருவானது. ஆனால் சோவியத் ரஷ்யா உடைந்த பின்னர் நேட்டோ கலைக்கப்படவில்லை. அதற்கு பதிலாக சோவியத் ரஷ்யாவின் முன்னாள் நாடுகளை நேட்டோ இணைத்துக் கொண்டது. அப்படித்தான் உக்கரனுக்கும் நேட்டா வந்தது.
உக்ரைன், ரஷ்யாவின் பக்கத்து நாடு அதாவது இந்தியா வங்கதேசம் போல. அமெரிக்கா ஆதரவுடன் உக்ரைன் தேர்தலில் அதிபராக ஜெயித்த ஜெலன்ஸ்கி, நேட்டோவில் இணைய விருப்பம் தெரிவித்தார். இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
ஏனெனில் நேட்டோவில் உக்ரைன் இணைந்து விட்டால் அந்நாட்டு எல்லையில் நேட்டோ படைகள் நிறுத்தப்படும். இது ரஷ்யாவுக்கு நேரடியான அச்சுறுத்தல். எனவே ஜெலன்ஸ்கியின் இந்த முடிவு குறித்து ரஷ்யா தொடர்ந்து எச்சரித்து வந்தது. இருப்பினும் உக்ரைன் இந்த விஷயத்தில் உறுதியாக இருந்தால் கடந்த 2022 ஆம் ஆண்டு போர் தொடங்கியது.
3 ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது. போரை நிறுத்த வேண்டும் என்று ரஷ்யா விருப்பம் தெரிவித்தாலும், உக்ரைன் அதற்கு முன்வரவில்லை. காரணம் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பைடனின் சப்போர்ட் தான். பைடன் ஏராளமான உதவியை உக்ரைனுக்கு செய்தார். எனவேதான் போரில் உக்ரைனால் இன்று வரை தாக்கு பிடிக்க முடிந்திருக்கிறது. ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது. புதிய அதிபரான டிரம்ப், ஜெலன்ஸ்கிக்கு சப்போர்ட் செய்ய மாட்டேன் என்று அறிவித்துவிட்டார்.
எனவே போரை முடிவுக்கு கொண்டுவர கேட்டிருக்கிறார். இப்படி நடந்துவிட்டால் உக்ரைனில் அதிபர் தேர்தல் வரும். இந்த தேர்தலில் ஜெலன்ஸ்கி ஜெயிக்க வாய்ப்பு குறைவு. ஆகவேதான் போரை நிறுத்த மாட்டேன் என அவர் ஒற்றைக்காலில் நின்றுக்கொண்டிருக்கிறார்.