இந்தியாவுக்கு F-35 போர் விமானங்கள் விற்கப்படும் என டிரம்ப் கூறியிருந்த நிலையில், SU-57 விமானம் தொடர்பாக ரஷ்யா அட்டகாசமான ஆஃபரை வழங்கியுள்ளது. இந்த ஆஃபர் மூலமாக டிரம்ப்பின் ராஜதந்திர உறவுக்கு ரஷ்யா செக் வைத்திருக்கிறது. போர் விமானங்கள் தொடர்பான ரஷ்யாவின் ஆஃபர் சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கின்றன.
சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் மோடி, டிரம்புடன் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியிருந்தார். அதில் முக்கியமானது ஆயுதங்கள் கொள்முதல் மற்றும் போர் விமானங்களை வாங்குதல். அதாவது இந்தியாவுக்கு F-35 எனும் போர் விமானத்தை கொடுக்க அமெரிக்கா ரெடி என்று டிரம்ப் கூறியிருக்கிறார். மேலோட்டமாக பார்த்தால் இது நல்ல விஷயமாக தெரியும். ஆனால், இந்த விமானத்தை வாங்குவதில் சில சிக்கல்கள் இருக்கின்றன.
மட்டுமல்லாது ரஷ்யா இதை விட பெஸ்ட் ஆஃபரை கொடுத்து டிரம்ப்பின் மூக்கை உடைத்திருக்கிறது. பிரபலாமான Su-57 விமானங்களை இந்தியாவுக்கு விற்பது மட்டுமல்லாது, அதை இந்தியாவில் தயாரித்துக்கொள்ளவும் ரஷ்யா அனுமதி வழங்கியுள்ளது. இந்த விமானத்தின் டெக்னாலஜியை இந்தியாவுக்கு கொடுக்க இருக்கிறோம் என்பதுதான் இதன் அர்த்தம். ஆனால் அமெரிக்கா இப்படி சொல்லவில்லை. காசு இருந்தா விமானத்தை வாங்கிட்டு போ என்றுதான் சொல்லியிருக்கிறது.
சரி ஏன் ரஷ்யாவின் Su-57 முக்கியம் என்பதை தெரிந்துக்கொள்வோம். முதலில் F-35 விமானம் குறித்து பார்ப்போம். இது மணிக்கு 1,965 கி.மீ வேகத்தில் பறக்கும். இது ஒலியை விட 1.6 மடங்கு வேகமாகும். இதன் சிறப்பம்சமே, மறைந்திருந்து தாக்குவதுதான். ரேடாரில் சிக்காமல் எதிரி நாட்டு எல்லைக்குள் நுழைந்து தாக்கும் திறன் கொண்டதாக சொல்லப்படுகிறது.
விமானங்களை கண்டுபிடிக்க ரேடார் பயன்படுத்தப்படும். ரேடார் என்பது ரேடியோ சிக்னல்கள். இதை வானத்தை நோக்கி அனுப்பும்போது, இது போகும் வழியில் ஏதாவது பொருள் இருந்தால், அதை காட்டி கொடுத்துவிடும். ஆனால் F-35 விமானம், ரேடார் சிக்னலை திருப்பி அனுப்பும் திறன் கொண்டது. இதற்கேற்றார் போல் ஸ்பெஷல் கோட்டிங்கை பெயின்ட் போல விமானம் மீது பூசப்பட்டிருக்கும். எனவே இது ரேடார் சிக்னலிலிருந்து தப்பித்துக்கொள்ளும். மறுபுறம் Su-57 விமானத்தை எடுத்துக்கொண்டால்,
மறைந்து தாக்கும் திறன் முழுமையாக இதற்கு கிடையாது. ஆனால் நேரடி சண்டை வந்துவிட்டால் இந்த விமானத்தை வீழ்த்த முடியாது. காரணம் இதன் வேகம்தான். மணிக்கு 2,130 கி.மீ அதாவது ஒலியை விட 2 மடங்கு வேகத்தில் இந்த விமானம் பறக்கும். பொதுவாக ஏவுகணை தாக்குதலிலிருந்து தப்பிக்க போர் விமானங்கள் 2 டெக்னிக்குகளை பயன்படுத்தும்.
Pugachev's Cobra என்பது, சட்டென விமானத்தின் வேகத்தை குறைத்து ஒரே இடத்தில் வானத்தில் விமானத்தை 90 டிகிரி நேராக நிற்க வைப்பதாகும். மணிக்கு 3000 கி.மீ வேகத்தில் ஒரு ஏவுகணை உங்களை தாக்க வருகிறது எனில், விமானத்தை மேலே உயர்த்தி, வேகத்தை குறைப்பதன் மூலம், ஏவுகணை உங்களை கடந்து சென்றுவிடும். ஹைவேயில், வேகமாக போகும் காருக்கு வழிவிடுவதை போலதான் இது. ஏவுகணைகளில் ரிவர்ஸ் கியர் கிடையாது என்பதால், போர் விமானம் தப்பித்துக்கொள்ளும்.
Tail Slide Maneuvers என்பது, நேர்க்கோட்டில் நூல் பிடித்ததை போல வானத்தை நோக்கி உயரே பறப்பதாகும். போதுமான உயரத்திற்கு வந்த பின்னர் கீழே இறங்கினால், வேகம் இரண்டு மடங்காக அதிகரிக்கும். மட்டுமல்லாது எதிரியின் விமானத்தை சுலபமாக தாக்கி அழித்துவிடலாம். இந்த இரண்டு டெக்னிக்குகளும் போரில் மிக முக்கியமானவை. ஆனால் இதை su-57 மட்டும்தான் செய்யும். அமெரிக்காவின் விமானங்கள் இதை செய்யாது. போதாத குறைக்கு இந்த விமானத்தின் விலையும், மெயின்ட்டனன்ஸ் காஸ்ட்டும் குறைவு. இப்படியான ஆஃபர் மூலமாக டிரம்ப்பின் மூக்கை புதின் உடைத்திருக்கிறார்.