24 மணி நேரத்தில் முடிவுக்கு வரும் உக்ரைன் போர்?
19 Feb,2025
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகத் தாக்குதல் நடந்து வரும் சூழலில், இப்போது திடீர் மாற்றம் நடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு பாசிட்டிவான விஷயங்கள் நடந்துள்ளன. இதே போல எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால் சில மாதங்களில் உக்ரைன் போர் மொத்தமாக முடிவுக்கு வரும் என்றே தெரிகிறது. கடந்த 2022ம் ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா திடீரென தாக்குதலை ஆரம்பித்தது. அப்போது தொடங்கிய போர் கிட்டதட்ட 3 ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது. போரை நிறுத்த இதுவரை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலன் தரவில்லை.
இதற்கிடையே அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு, போர் நிறுத்தம் குறித்த பேச்சுகள் தீவிரமடைந்துள்ளன. எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால் விரைவில் போர் முடிவுக்கு வரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் ரஷ்ய அதிபர் புதின் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். சம்பவம் 1 அதாவது போர் நிறுத்தம் குறித்து தேவை என்றால் நேரடியாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக புதின் கூறியுள்ளார். இதை ரஷ்ய அதிபர் மாளிகையும் உறுதி செய்துள்ளது. இது போர் நிறுத்தம் விரைவில் சாத்தியம் என்பதையே காட்டுவதாக இருக்கிறது. எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால் சில மாதங்களில் போர் நிறுத்தம் சாத்தியமாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
சம்பவம் 2 மறுபுறம் அமெரிக்கா மற்றும் ரஷ்யா நாட்டுப் பிரதிநிதிகளும் இன்றும் உக்ரைன் போர் குறித்து ஆலோசனை நடத்தினர். சவுதியில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டம் சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்பட்டது. இந்த கூட்டமும் பாசிட்டிவாகவே முடிந்தது. இரு நாடுகளும் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து நடத்தத் தனியாக டீமை அறிவிக்கவுள்ளன. அவர்கள் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து நடத்துவார்கள் எனத் தெரிகிறது. காரணம் டிரம்ப்? இப்படி ஒரே நேரத்தில் அடுத்தடுத்து இரு பாசிட்டிவ் சம்பவங்கள் நடந்துள்ளது நல்ல விஷயமாகவே பார்க்கப்படுகிறது.
உக்ரைன் போர் என்பது இரு நாடுகளுக்கு மட்டும் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தவில்லை. மாறாக அது சர்வதேச வர்த்தகத்தையும் கடுமையாகப் பாதித்தது. இதனால் டிரம்ப் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவேன் என்பதே பிரச்சாரம் முதலே பேசி வந்தார். அவர் சொன்னது போலவே இப்போது தனியாக டீமையும் அனுப்பியுள்ளார். ரஷ்யா டிமாண்ட் என்னவாக இருக்கும்? 2022ம் ஆண்டு அமெரிக்கா தலைமையிலான நேட்டோவில் உக்ரைன் இணைய ஆர்வம் காட்டியது. ஒருவேளை நேட்டோவில் உக்ரைன் இணைந்திருந்தால்.. உக்ரைன் நாட்டில் அதாவது ரஷ்யாவுக்கு மிக அருகே நேட்டோவால் படைகளைக் களமிறக்கி இருக்க முடியும். மேலும், ரஷ்யா தாக்குதல் நடத்தினால் அதற்கு ஒட்டுமொத்த நேட்டோ நாடுகளும் பதிலடி கொடுக்க வேண்டி இருந்து இருக்கும்.
அமெரிக்கா இதைக் கண்டித்தே ரஷ்யா முதலில் தாக்குதலை ஆரம்பித்தது. ஆனால், இந்த விவகாரத்தில் இதுவரை எந்தவொரு முடியும் எடுத்ததாகத் தெரியவில்லை. இருப்பினும், நேட்டோவில் உக்ரைன் இணையாது என்ற உறுதி தரப்பட்டால் மட்டுமே ரஷ்யா போர் நிறுத்தத்தை ஒப்புக்கொள்ளும் என்றே தெரிகிறது. வரும் காலங்களில் பேச்சுவார்த்தைகளில் இந்த விவகாரம் முக்கியத்துவம் பெறும் என்றே தெரிகிறது. உக்ரைன் ஆவேசம் அதேநேரம் தங்களை அழைக்காமல் போர் நிறுத்தம் குறித்துப் பேசுவதை ஏற்கவே முடியாது என்று உக்ரைன் அதிருப்தி தெரிவித்துள்ளது. தங்கள் இல்லாமல் எடுக்கப்படும் எந்தவொரு முடிவு அல்லது உடன்படிக்கையையும் ஏற்கப்போவதில்லை என்றும் தங்களைப் பேச்சுவார்த்தைக்கு இணைப்பதே சரியாக இருக்கும் என்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.