
இஸ்ரேல் சென்றுள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, அந்த நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து பேசினார். அப்போது ஹமாஸ் அமைப்பு என்பது கண்டிப்பாக ஒழித்து தற்போதைய போர் நிறுத்தத்தை எதிர்காலத்திலும் தொடர வேண்டும் என்று ஆக்ரோஷமாக பேசி உள்ளார். இஸ்ரேல் - காசா இடையே தற்காலிகமாக போர் நிறுத்தம் அமலில் உள்ளது. போர் நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தத்தின்படி 90 நாள் போர் நிறுத்தம் செயல்பாட்டில் உள்ளது. இஸ்ரேலில் இருந்து பாலஸ்தீன சிறைவாசிகளும், காசாவில் செயல்படும் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் பணையக்கைதிகளையும் விடுவித்து வருகின்றனர். இந்த போரை நிரந்தரமாக நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளார். அதன்படி காசாவை அமெரிக்கா கைப்பற்றும். காசாவில் அமெரிக்கா வீடுகள் கட்டி கொடுத்து வேலைவாய்ப்புகளை உருவாக்கும். காசாவில் உள்ள மக்கள் எகிப்து, ஜோர்டான் உள்ளிட்ட நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
இதனை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வரவேற்ற நிலையில் மத்திய கிழக்கு நாடுகளின் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். காசா மக்களை ஒருபோதும் வெளியேற்ற கூடாது என்று டொனால்ட் டிரம்புக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இதற்கிடையே தான் எதிர்ப்பு தெரிவிக்கும் தலைவர்களை சமாதானம் செய்யம் வகையில் மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ சந்தித்து பேச உள்ளார்.
இதற்கான சுற்றுப்பயணத்தை அவர் தொடங்கி உள்ளார். இன்று இஸ்ரேல் ஜெருசலேமில் மார்கோ ரூபியோ மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் சந்தித்து பேசினர். அதன்பிறகு இருவரும் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினர். இந்த வேளையில் மார்கோ ரூபியா, காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்புக்கும் கடும் எச்சரிக்கை செய்தார். டொனால்ட் டிரம்பை போல் அவர் மிரட்டல் விடுத்தார். இதுதொடர்பாக மார்கோ ரூபியா ‛‛ கடந்த 2023 அக்டோபர் 7 ம் தேதி இஸ்ரேலில் இருந்து பிடித்து செல்லப்பபட்ட டஜன் பணையக்கைதிகளை இன்னும் ஹமாஸ் விடுவிக்கவில்லை. அவர்களை விடுவிக்காவிட்டால் நரகத்துக்கான அனைத்து வாயில்களும் திறக்கப்படும்.
ஹமாஸ் ஒரு ராணுவம் போன்றோ அல்லது அரசு படை போன்றோ செயல்பட முடியாது. வன்முறை, அச்சுறுத்தல் உள்ளிட்டவற்றை கையில் எடுக்கும்போது அமைதி என்பது சாத்தியமற்றதாகிவிடும். இதனால் அதுபோன்ற செயல்கள், மொழிகளை ஒழிக்க வேண்டும். வன்முறை சார்ந்த பேச்சுக்கள் போரில் பெரும் அழிவுகளை தந்துவிடும். அதோடு காசாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் ஒழிக்கப்பட வேண்டும். இதன்மூலம் தற்போதைய போர் நிறுத்தத்தை எதிர்காலத்திலும் தொடர வேண்டும்'' என்றார்