86 வயது இஸ்ரேலிய பணயக்கைதி மரணம்
12 Feb,2025
ஹமாசினால் பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட 86 வயது இஸ்ரேலியர் உயிரிழந்துவிட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
சொலொமோ மன்சுர் என்ற இஸ்ரேலிய பணயக்கைதி உயிரிழந்துவிட்டார் எனஇஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் தெரிவித்துள்ளார்.
ஈராக்கில் பிறந்தவரான இவர் இஸ்ரேலின் கிபுட்ஸ் கிஸிபும் பகுதியில் பணயக்கைதியாக பிடிக்கப்பட்டார்.
ஹமாஸ் அமைப்பு முதல்கட்டமாக விடுதலைசெய்யவுள்ள 33 பணயக்கைதிகளின் பட்டியலில் இவரது பெயர் இடம்பெற்றிருந்தது.
இதேவேளை சமீபத்தில் பெறப்பட்ட புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் 86 வயது பணயக்கைதி உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.