காசாவிற்கு அமெரிக்க படையினரை அனுப்புவாரா டிரம்ப் - தெரிவித்துள்ளது என்ன?
05 Feb,2025
காசாவில் நிலவும் பாதுகாப்பு வெற்றிடத்தை நிரப்புவதற்காக அமெரிக்க படையினரை அனுப்புவதற்கான சாத்தியக்கூறுகளை அமெரிக்க ஜனாதிபதி நிராகரிக்கதவறியுள்ளார்.
காசாவில் நிலவும் பாதுகாப்பு வெற்றிடத்தை நிரப்புவதற்காக அமெரிக்க படையினரை அனுப்புவாரா என்ற கேள்விக்கு காசாவை பொறுத்தவரை நான் என்ன அவசியமோ அதனை செய்வேன் படைகளை அனுப்புவது அவசியம் என்றால் நான் அதனையும் செய்வேன், நாங்கள் காசாவை கையகப்படுத்தி அதனை அபிவிருத்தி செய்யப்போகின்றோம் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
நீண்டகால உரிமை பிரச்சினை உள்ளது எனக்கு தெரியும்,மத்திய கிழக்கின் அந்த பகுதிக்கும் மத்தியகிழக்கின் முழுவதற்கும் ஸ்திரதன்மையை கொண்டுவருவதற்கு நான் முயல்கின்றேன் என தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி இது மிகவும் இலகுவாக எடுக்கப்பட்ட முடிவில்லை, நான் உரையாடிய அனைவரும் காசா அமெரிக்கா சொந்தமாக்கிக்கொள்வதையும் அபிவிருத்தி செய்வதையும் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளைஉருவாக்குவதையும் விரும்புகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.