அதிகாரத்தை தன்வசம் வைத்துள்ள சிறியகுழுவொன்று அமெரிக்காவில் உருவாகிவருகின்றது -
18 Jan,2025
அதிகளவு செல்வத்தையும் அதிகாரத்தையும் தன்வசம் வைத்துள்ள சிறியகுழுவொன்று அமெரிக்காவில் உருவாகிவருகின்றது - அவர்களால் ஜனநாயகத்திற்கு ஆபத்து- பிரியாவிடை உரையில் ஜோ பைடன்
அமெரிக்காவில் பணபலம் படைத்த ஆதிக்ககுழுவொன்று உருவாகிவருவது குறித்து ஜனாதிபதி ஜோபைடன் தனது பிரியாவிடை உரையில் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
மிக அதிகளவு செல்வத்தையும், அதிகாரத்தையும் தன்வசம் வைத்துள்ள சிறியகுழுவொன்று உருவாகிவருகின்றது, அவர்களின் செல்வாக்கு எங்களின் ஜனநாயகத்திற்கும், அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரத்திற்கும் ஆபத்தானதாக மாறியுள்ளது என ஜோபைடன் தனது பிரியாவிடை உரையில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கர்கள் மீது அதிகாரத்தை பயன்படுத்தக்கூடிய அதி செல்வந்த தொழில்நுட்ப - தொழில்துறை குறித்து தனது உரையில் 82 வயது பைடன் எச்சரித்துள்ளார்.
வெள்ளை மாளிகையிலிருந்து தனது இறுதி தொலைக்காட்சி உரையை ஆற்றிய பைடன் காலநிலை மாற்றம். சமூக ஊடகங்களில் தவறான தகவல் பரவல் குறித்து எச்சரித்துள்ளார்.
தனது உரையில் தனது ஆட்சியின் சாதனைகள் குறித்து சுட்டிக்காட்டிய ஜோபைடன், தான் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் அதிகளவில் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டமை, உள்கட்டமைப்பு, சுகாதார செலவீனங்கள், நாட்டை பெருந்தொற்றின் பிடியிலிருந்து விடுவித்தது போன்றவை குறித்து சுட்டிக்காட்டியுள்ளார்.
எங்களின் செயல்களின் பலாபலன்களை உணர்வதற்கு அனுபவிப்பதற்கு சிறிது காலம் எடுக்கும், ஆனால் விதைகளை விதைத்துள்ளோம் என பைடன் தெரிவித்துள்ளார்.