அசர்பைஜான் விமானத்தை ரஷ்யா சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் குற்றச்சாட்டு: ரஷ்யா திட்டவட்ட மறுப்பு
27 Dec,2024
அசர்பைஜான் பயணிகள் விமானத்தை ரஷ்யா சுட்டு வீழ்த்தியதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. கஜகஸ்தானில் அசர்பைஜானை சேர்ந்த பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 40க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த நிலையில் விபத்துக்குள்ளான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விமானத்தை ரஷ்யா சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் குற்றம்சாட்டியது.
அதற்கு ஆதாரமாக விமானத்தின் பாகங்கள் மீது குண்டு துளைக்கப்பட்ட காட்சிகளை உக்ரைன் வெளியிட்டுள்ளது. உக்ரைனின் குற்றசாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ள ரஷ்யா விசாரணை முடியும் முன்பே இவ்வாறு கூறுவது சரி அல்ல என ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் விமான விபத்தில் ரஷ்யாவிற்கு தொடர்பு உள்ளதா என நேட்டோ அமைப்பும் விசாரணையை தொடங்கி உள்ளது.