இஸ்ரேல் மீது ஏமன் ராக்கெட் தாக்குதல்: 16 பேர் காயம்
21 Dec,2024
இஸ்ரேல் மீது ஏமனில் உள்ள ஹவுதி படையினர் நடத்திய ராக்கெட் தாக்குதலில் 16 பேர் காயமடைந்தனர். இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள ராணுவ நிலைகளை குறி வைத்து ஏமனில் இருந்து ஹவுதி படையினர் ராக்கெட்டுகள் மூலம் தாக்குதல் நடத்தினர். இதில் பல வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கி விழுந்ததில் 16க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.