தாய்லாந்தில் பண்டிகை நிகழ்வின் போது வெடிபொருள் வீச்சு - மூவர் பலி
15 Dec,2024
தாய்லாந்தில் பெருமளவானவர்கள் கூடியிருந்த நிகழ்வொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
பண்டிகையொன்றை குறிக்கும் கொண்டாட்டங்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை வெடிபொருள் வீசப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தாய்லாந்தின் வடபகுதி டக் மாகாணத்தில் உள்ள உம்பாங் மாவட்டத்தில் வருடாந்தம் இடம்பெறும் பண்டிகை நிகழ்வின்போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
48 பேர் காயமடைந்துள்ளனர் இவர்களில் ஆறு பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மக்கள் நடனமாடிக்கொண்டிருந்த இடத்தில் வெடிபொருள் விழுந்து வெடித்தது,காயமடைந்த சிலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்,
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வெடிபொருட்களே தாக்குதலிற்கு பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பதட்டமான நிலை காணப்படுவதையும் காயமடைந்வர்களையும் காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.