சீன இறக்குமதி சோலார் தகடு, பாலிசிலிக்கான், டங்ஸ்டன் மீதான இறக்குமதி வரி உயர்வு: அமெரிக்கா அறிவிப்பு
13 Dec,2024
அமெரிக்காவின் சுத்தமான எரிசக்தி வணிகங்களைப் பாதுகாப்பதற்காக சீனாவிலிருந்து சோலார் தகடு, பாலிசிலிகான் மற்றும் சில டங்க்ஸ்டன் தயாரிப்புகளின் மீதான வரியை உயர்த்த அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்க வர்த்தக துறையின் பிரதிநிதி காத்ரீன் டய் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனாவில் தயாரிக்கப்பட்ட சோலார் தகடு,பாலிசிலிக்கான் மீதான இறக்குமதி வரி 25 % முதல் 50 % ஆக அதிகரிக்கப்படும். டங்க்ஸ்டன் தயாரிப்புகளின் இறக்குமதி வரி 25% சதவீதமாக உயர்த்தப்படும். இந்த கட்டண உயர்வு வரும் ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.