உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் போரை நிறுத்த டிரம்ப் அறிவுரை: பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா தயார்
                  
                     10 Dec,2024
                  
                  
                     
					  
                     
						
	 
	 உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்த டிரம்ப் போரை உடனடியாக நிறுத்தவேண்டும் என அறிவுறுத்திய நிலையில் தாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ரஷ்யா அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் உலகில் நடக்கும் போர்களை தான் நிறுத்தப்போவதாக அறிவித்தார். இந்நிலையில் பாரிஸில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் பிரான்ஸ் நாட்டு தலைவர்களை சந்தித்த டிரம்ப் ரஷ்யாவிற்கு எதிரான போரை உடனே நிறுத்துமாறு அறிவுறுத்தினார். இதற்கு பதிலளித்துள்ள ரஷ்ய வெளியுறவுத்துறை போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைக்கு அதிபர் புடின் எப்போதும் தயாராக இருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
	 
	 
	மேலும் பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகள் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், சவுதிஅரேபியா உள்ளிட்டவை அமைதி ஒப்பந்தத்தை முன்னெடுத்தாலும் தாங்கள் வரவேற்பதாக குறிப்பிட்டுள்ளது. நேட்டோவில் இணையும் முடிவை கைவிட்டு, மாஸ்க்கோ உரிமை கோரும் 4 மாகாணங்களையும் தங்களிடம் ஒப்படைத்தால் போர் உடனடியாக நிறுத்தப்படும் என்று கடந்த ஜூன் மாதமே புடின் அறிவித்திருந்தார். இதனை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நிராகரித்த நிலையில் தற்போது ட்ரம்பின் தலையீடு 2 நாட்டு போரை முடிவுக்கு கொண்டுவருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.