2 பில்லியன் $ தங்கக் கட்டிகளையும் சிரியாவில் இருந்து ரஷ்யா கொண்டு சென்றார் !
09 Dec,2024
குடும்பத்தோடு நாட்டை விட்டு தப்பியோடி 2B பில்லியன் $ தங்கக் கட்டிகளையும் சிரியாவில் இருந்து ரஷ்யா கொண்டு சென்றார் !
கிளர்ச்சியாளர்கள் தலைநகர் டமாஸ்கசை கைப்பற்ற, சில மணி நேரங்களுக்கு முன்னதாக, சிரிய ஜனாதிபதி அசாட், நேற்றைய தினம் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார். சிரிய நாட்டுக்கு சொந்தமான ராணுவ விமானம் ஒன்றில், தனது மகள் மற்றும் 2 மகன்களோடு அவர் மொஸ்கோ பறந்துள்ளார். ஏற்கனவே தனது மனைவியை, ரஷ்யாவுக்கு அனுப்பி வைத்து விட்டார் அசாட். அவரிடம் மொத்தமாக சுமார் 2பில்லியன் டாலர் பெறுமதியான சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இவை அனைத்தையும் இவர் தங்கக் கட்டிகளாக மாற்றியே வைத்திருந்துள்ளார்.
ராணுவ விமானத்தில் தனக்கு மிக மிக நெருக்கமான ஒரு சிலருடன் இவர் ரஷ்யா சென்று அங்கே தஞ்சம் புகுந்துள்ளார். மொஸ்கோவில் உள்ள மிகவும் ஆடம்பரமான இடமாக கருதப்படும் 7 தெருவில், இவருக்கு ஏற்கனவே ஒரு ஆடம்பர தொடர்மாடி குடியிருப்பு ஒன்று சொந்தமாக உள்ளது. இதன் விலை மட்டும் 40M மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். தற்போது இவர் ரஷ்ய ராணுவ பாதுகாப்பின் கீழ், இந்த தொடர்மாடிக் குடியிருப்பில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டமாஸ்கஸ் நகரில் இருந்து, இவரது விமானம் ரஷ்யா நோக்கி பறந்த சமயம், அதிபர் அசாட்டுக்கு ஆதரவான பல மீடியாக்கள், அவரது விமானம் விபத்திற்கு உள்ளானதாக அறிவித்து. அவர் இறந்து விட்டதாக தெரிவித்து வந்தன.
ஆனால் இவை அனைத்துமே ரஷ்யாவின் கட்டுக் கதை மற்றும் திட்டமிடல் ஆகும் என அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. அதிபர் அசாட்டை பாதுகாப்பாக தனது நாட்டுக்குள் கொண்டு வர ரஷ்யா செய்த உக்தியே இது. இதற்கான ஏற்கனவே ஒரு போலி விமானத்தை பறக்க விட்டுள்ளார்கள். மேற்கு உலக நாடுகள் கண்களில் மண்ணைத் தூவ ரஷ்யா இப்படி ஒரு ஏமாற்று வேலையை செய்துள்ளது என்பது வெட்டவெளிச்சம் ஆகியுள்ளது.